புதன்கிழமை, நவம்பர் 20, 2024

ஜெமினிக்கு சாம்பார்னு பட்டப்பெயர் வர இதுதான் காரணம்.. காதல் மன்னனை வசியப்படுத்திய 4 பேரு யாரு தெரியுமா?

Gemini Ganesan: சினிமாவில் முன்னணி நடிகராக நடிக்கும் பிரபலங்கள் பலருக்கும் ஏதாவது பட்டப்பெயர் வைத்து அழைப்பது வழக்கம் தான். அந்த வகையில் காதல் மன்னன், சாக்லேட் பாய், வசீகர பேச்சால் மயக்க அடிக்கும் நடிகர் என நிறைய பேரை நாம் சொன்னாலும் இவர்களுக்கு எல்லாம் மூத்தவராக இருந்து தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்தவர் ஜெமினி கணேசன்.

பொதுவாக இவர் நடித்த படங்கள் காதல் படமாக தான் இருக்கும். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னன் ஆகவே வாழ்ந்து வந்திருக்கிறார். அதனால் தான் நான்கு மனைவிகளுடன் காதல் வசப்பட்டு பல லீலைகளை செய்திருக்கிறார்.

நிஜத்திலும் காதல் மன்னனாக வாழ்ந்த ஜெமினி

இவருடைய முதல் மனைவி அலமேலு, இவர்களுக்கு மொத்தம் நான்கு மகள்கள். அதில் ரேவதி, கமலா செல்வராஜ், ஜெயலட்சுமி ஆகிய மூன்று பேரும் மருத்துவர்கள். நான்காவது மகள் நாராயணி பத்திரிகையாளராக பணியாற்றினார்.

இவர்களை தொடர்ந்து இரண்டாவதாக கல்யாணம் பண்ணியது புஷ்பவல்லி. இவர்களுக்கு ரேகா மற்றும் ராதா என இரு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ரேகா பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். அடுத்ததாக மூன்றாவது மனைவியாக நடிகை சாவித்ரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜயா சாமுண்டீஸ்வரி என்கிற மகளும் சதீஷ்குமார் என்கிற மகனும் இருக்கிறார்கள்.

இப்படி மூன்று மனைவிகள் இருக்கும் பொழுதே ஜெமினி கணேசன் 78வது வயதில் நான்காவது திருமணத்தை செய்து கொண்டார். மனைவி பெயர் ஜூலியானா ஆண்ட்ரூ, இவருக்கு குழந்தை இல்லை.

இப்படி இந்த நான்கு மனைவிகளுடன் காதல் மன்னனாக வாழ்ந்த ஜெமினி கணேசனுக்கு ஏன் சாம்பார்னு பட்டப்பெயர் வந்தது என்பதை பற்றி பல வருடங்களுக்கு பின் ஜெமினி கணேசனின் மகளாக இருக்கும் கமலா செல்வராஜ் சமீபத்தில் யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார்.

அதாவது அவர் கூறியது என்னவென்றால், எனது தந்தை மிகவும் அழகாகவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இளமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அதற்காகவே தினமும் உடற்பயிற்சி செய்து பிட்டாக இருப்பார். அதனால் அசைவம் சாப்பிட மாட்டார்.

எப்பொழுதும் சைவ சாப்பாடுகளை சாப்பிட்டு அதன் மேல் அதிக பிரியம் வைத்து விரும்பி சாப்பிடுவார். அதிலும் தினமும் சாம்பாரு அவருடைய சாப்பாட்டில் இருக்க வேண்டும். அதனால் பார்ப்பவர்கள் அனைவரும் சாம்பார் என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். அதுவே போக போக ஜெமினி கணேசன் சாம்பாரு என்று மாறிவிட்டதாக கமலா செல்வராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News