Pa Ranjith: இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிய தங்கலான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. இதில் விக்ரமுடன் பசுபதி, பார்வதி மேனன், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படம் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. இதனைத் தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி ஹிந்திலும் ரிலீசாக போகிறது.
அத்துடன் பல வருடங்களாக வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த விக்ரமுக்கு தங்கலான் படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கிடைத்து விட்டது. அதே மாதிரி பா. ரஞ்சித்துக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கதைகளுடன் மூன்று படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் முதலில் வேட்டுவம் என்ற படத்தை இயக்கப் போகிறார்.
தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் பா ரஞ்சித்
இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு பா ரஞ்சித்தின் லக்கி ஹீரோவாக இருக்கும் அட்டக்கத்தி தினேஷ் தான் கமிட்டாகி இருக்கிறார். அதே நேரத்தில் இதில் நம்பர் நடிகரான ஆர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். ஆனால் ஹீரோவாக சமீப காலமாக அவருக்கு கை கொடுக்கவில்லை என்பதால் இதில் வில்லனாக மாறி இருக்கிறார்.
இப்படத்தை முடித்துவிட்டு பா ரஞ்சித் மற்றும் ஆர்யாவுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்கப் போகிறார். இப்படி இரண்டு படத்திற்கு அஸ்திவாரம் போட்ட நிலையில் மூன்றாவது படத்திற்கும் பிள்ளையார் சுழியை போட்டு விட்டார்.
அந்த வகையில் சூர்யாவை வைத்து பா ரஞ்சித் இயக்கப் போகிறார். இது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியான நிலையில் நேற்று ஜெர்மன் என்ற டைட்டிலையும் அறிவித்து விட்டார்கள். இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கப் போகிறது. ஆனால் தற்போது சூர்யா நிற்கக் கூட நேரமில்லாமல் கைவசம் எக்கச்சக்கமான படங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தையும் ஆரம்பித்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து நிலையில் பா.ரஞ்சித்துடன் கூட்டணி போட்ட ஜெர்மன் படமும் சூர்யாவின் லைன் அப்பில் சேர்ந்து விட்டது.
அத்துடன் ரஞ்சித் படம் என்றால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் விதமாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இந்த கதையில் சூர்யா நடித்தால் எந்த மாதிரியான காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் இப்பொழுதே யூகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் இவர்களுடைய கூட்டணி நிச்சயம் வெற்றி கூட்டணியாக ரசிகர்களை திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசூலில் சக்கை போடு போடும் தங்கலான்
- தங்கலான் படத்தில் மதத்தை அவமானப்படுத்தியதால் உருளும் பா ரஞ்சித்தின் தலை
- தங்கலான் 6-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்
- சம்பவம் செய்ய தயாராகும் தங்கலான்