புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

திருந்தாத மீனாவிற்கு ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து கொடுத்த பதவி.. முத்துவிடம் அடிவாங்கும் மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து கோபமாக இருக்கிறார் என்பதால் அவர் மனசை மாற்ற வேண்டும் என்பதற்காக பிடித்த சாப்பாடு பண்ண வேண்டும் என்று மீனா, சிக்கன் குழம்பு வித்தியாசமாக செய்து வீடு ஃபுல்லா மணக்கும் வகையில் அசத்துகிறார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த சுருதி, மீனா சமைக்கும் சாப்பாட்டை புகழ்ந்து தள்ளி பாராட்டி விட்டார்.

அப்பொழுது அங்கே வந்த விஜயா, வெறும் குழம்பை மட்டும் ரெடி பண்ண போதுமா? தோசை சுட்டால் தானே சாப்பிட முடியும். நாங்களால் நேரத்துக்கு சாப்பிடக்கூடிய ஆள், சில குடும்பங்களில் தான் எப்பொழுது சாப்பாடு கிடைக்குதோ அப்பொழுது சாப்பிட்டு வயிறு நிரப்புவாங்க என்று மீனா குடும்பத்தை அசிங்கப்படுத்தி பேசுகிறார். இதை பார்த்த சுருதி, மீனாவிற்கு சப்போர்ட்டாக விஜயாவிடம் கோபப்பட்டு பேசுகிறார்.

சூடு சொரணை இல்லாமல் இருக்கும் விஜயாவின் மருமகள்

அப்பொழுது வீட்டிற்கு அனைவரும் வந்த நிலையில், எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து வீட்டார்கள். ஆனால் முத்து மட்டும் வராததால் மீனா பதட்டத்திலேயே புருஷனுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒவ்வொருவரும் மீனா சாப்பாட்டை பாராட்டி சாப்பிடுகிறார்கள்.

ஆனால் விஜயா மட்டும் இந்த சாப்பாட்டில் உப்பு இல்லை, என்ன சமைத்து இருக்கிறாய் என்று திட்டிக்கொண்டே சாப்பிடுகிறார். பிறகு அனைவரும் சாப்பிட்டு முடித்து டைனிங் டேபிள் சாப்பிட்ட தட்டை அப்படியே வைத்துவிட்டு கை கழுவி எல்லோரும் தூங்க போய் விடுகிறார்கள். இதை பார்த்து மீனா கொஞ்சம் கூட புத்தியே இல்லாமல் அதை சுத்தம் செய்கிறார்.

சமையல் தனக்கு பிடிச்சு செய்கிறார் என்பது ஒரு விஷயம், அதனால் குடும்பத்திற்காக பார்த்து பார்த்து சமைக்கிறார். இது போதாது என்று ஒவ்வொருவரும் சாப்பிட்ட சாப்பாட்டு தட்டை கூட மீனா தான் கழுவ வேண்டும் என்று நிலைமை அந்த வீட்டு மருமகளாக பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மீனா வாயைத் திறந்து எதுவும் சொல்லாத வரை அந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து மீனாவிற்கு வேலைக்காரி பதவியை தான் கொடுப்பார்கள்.

ஆனால் வீட்டு வேலையை பார்ப்பவர்கள் கூட, சாப்பிட்டு தட்ட கழுவி போட்டிருந்தால்தான் கழுவர்கள். ஆனால் அதைவிட மோசமாக மீனாவின் நிலைமை இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் இருக்கணுமா என்று மீனாவிற்கு கொஞ்சம் கூட யோசனை வரவேண்டும். விஜயா செய்வதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இவர்களை எப்படியாவது தனிக்குடித்தனம் அனுப்பி வைக்க வேண்டும் என்றுதான்.

அந்த வகையில் விஜயா மட்டும் அதை செய்து விட்டால் அப்பொழுதுதான் முத்து மற்றும் மீனாவிற்கு விடிவுகாலம் பிறக்கும். பிறகு முத்து வந்ததும் அவருக்கு தனியாக சாப்பாடு எடுத்து வைத்ததால் இரண்டு பேரும் சமாதானப்படுத்திக் கொண்டு சாப்பிட்டு முத்து வாங்கிட்டு வந்த அல்வாவை கொடுத்து மீனாவிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறார்.

இதை பார்த்த விஜயா வைத்திரச்சலில் இருக்கும் பொழுது மீனா அல்வா கொடுத்து, நான் சந்தோஷமாக இருக்கிறேன். நீங்களும் இந்த அல்வா சாப்பிட வேண்டும் என்று சொன்னீங்கல்ல, இதை எடுத்து சாப்பிட்டுக்கோங்க என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு மனோஜ் ஷோரூம் கிளம்பிக் கொண்டிருக்கும் பொழுது ஹாலில் இருக்கும் கட்டிலில் காலில் இடித்துக் கொண்டார்.

இதை பார்த்த விஜயா மற்றும் மனோஜ், முத்து மீனாவை கூப்பிட்டு நடுவீட்டில் யாராவது இப்படி கட்டிலே கொண்டு வந்து போடுவாங்களா. பாரு, மனோஜ் காலில் இடிச்சிட்டு வழியில் துடிக்கிறான் என்று சொல்லிய நிலையில், முத்து நான் அதை சரி பண்ணி விடுகிறேன் என்று மனோஜை அடிக்கிறார்.

இதை பார்த்து வழக்கம் போல் புருஷனுக்காக ரோகினி சப்போர்ட் பண்ணுவார். ஆனால் இப்படியே தான் இந்த நாடகம் போய்க்கொண்டிருக்கிறது தவிர ரோகிணி செய்த அட்டூழியங்கள் பற்றி வெளிவராமல் டல் அடிக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News