புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் ஈஸ்வரி.. எழிலுக்காக பாக்யா செய்யப் போகும் சம்பவம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தாவின் என்பதாவது பிறந்த நாள் என்பதால் கோவிலில் வைத்து பங்க்ஷன் பண்ணலாம் என்று பாக்கியா முடிவெடுத்து இருக்கிறார். இது ஒரு விதத்தில் எழில்காக தான் பாக்யா இந்த மாதிரி ஏற்பாடுகளை பண்ணுகிறார். ஏனென்றால் வீட்டை விட்டு எழிலை அனுப்பிய பாக்யாவிற்கு, பையன் மருமகள் பேத்தி என்று பாசம் வந்து விட்டது.

அதை நேரத்தில் அவர்களிடம் போன் பண்ணி பேசவும் முடியாத சூழ்நிலை என்பதால் இந்த ஒரு பங்க்ஷனில் அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள். அதன் மூலம் அவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கும். அமிர்தாவை சமாதானப்படுத்தி எழிலுக்கு சப்போர்ட்டாக நின்னு வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாக்கியா இந்த சம்பவத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.

பங்ஷனுக்கு வரும் கோபி மற்றும் எழில்

இதனை தொடர்ந்து ஈஸ்வரி, கணவரின் பிறந்தநாளுக்கு 12 மணிக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று குட்டி போட்ட பூனை மாதிரியே அங்க சுற்றிக்கொண்டே வந்தார். பிறகு சரியாக 12 மணி ஆனதும் ஈஸ்வரி, கணவரை எழுப்பி பிறந்தநாள் வாழ்த்து சொல்லி சாக்லேட்டை பரிசாக கொடுக்கிறார். பிறகு இருவரும் அந்த நேரத்தில் சாக்லேட்டை வாயில் ஊட்டி விட்டு பாசத்தை பரிமாறிக் கொள்கிறார்கள்.

அடுத்ததாக கோவிலுக்கு கிளம்பும் விதமாக அனைவரும் சாமி கும்பிட்டு கிளம்பி கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது தாத்தா, ஈஸ்வரி பண்ணின விஷயங்களை அனைவரிடமும் சொல்லி குதூகலமாக சந்தோஷப்பட்டு கொள்கிறார். அதே நேரத்தில் எழில் போன் பண்ணி இன்னும் வாழ்த்து சொல்லவில்லை என்று போனை பார்த்து கொஞ்சம் டல்லாகி விடுகிறார்.

இருந்தாலும் எழில் போன் பண்ணுவார் என்ற நம்பிக்கையில் தாத்தா காத்துக் கொண்டிருக்கிறார். பாக்யாவை எழிலுக்கு போன் பண்ணி கூப்பிட சொல்கிறார். ஆனால் பாக்யா, நான் எதற்கு கூப்பிட வேண்டும் அவனுக்கு தாத்தா மீது அன்பும் பாசமும் இருந்தால் அவனை வருவான் என்று எழில் மீது இருக்கும் நம்பிக்கையால் கூப்பிட மறுக்கிறார்.

அடுத்ததாக ஈஸ்வரி புது சேலையை கட்டிட்டு வந்து தாத்தா முன்னாடி ஒரு டான்ஸ் போட்டு ரொமான்ஸ் பண்ணுகிறார். இதை பார்த்த தாத்தா சந்தோஷத்தில் வெட்கப்பட்டுக் கொள்கிறார். அதாவது இவர்களை பார்க்கும் பொழுது சந்தோசமாக இருந்தாலும், பிள்ளை இல்லாத வீட்டில் வயசானவங்க துள்ளி விளையாடுவது போல் இருக்கிறது. இதே சந்தோஷம் எழில் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் எழில் வீட்டை விட்டு போனதற்கு நான் தான் காரணம் என்று கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் ஈஸ்வரி செய்யும் காரியத்தை பார்க்கும் பொழுது தான் கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது. பிறகு அனைவரும் கோவிலுக்கு போய்விடுகிறார்கள். அங்கே பாக்யா மற்றும் செழியன் அனைத்து ஏற்பாடுகளையும் பக்காவாக பண்ணி வைத்து விட்டார். இதனைத் தொடர்ந்து பங்க்ஷன் சிறப்பாக ஆரம்பிக்கும் பொழுது கோபி வந்து விடுகிறார்.

அதே மாதிரி எதிர்பார்க்காத விதமாக எழில், அமிர்தா, நிலா பாப்பா என அனைவரும் வந்து பங்க்ஷனில் கலந்து கொள்கிறார்கள். இப்படியே இந்த நாடகத்துக்கு எண்டுகார்டு போட்டு விட்டால் கூட நன்றாக இருக்கும்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News