Mari Selvaraj: பொதுவாக ஏற்றம், இறக்கம் என்பது எல்லாருடைய வாழ்க்கையிலும் சாதாரண ஒன்றுதான். ஆனால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படங்களை கொடுத்து தோல்வியே தராத இயக்குனர்கள் சிலர் இருக்கின்றனர். அந்த லிஸ்டில் இப்போது மாரி செல்வராஜ் இருக்கிறார்.
சமீபத்தில் அவருடைய வாழை படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு முன்னதாக அவர் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதேபோல் வெற்றி இயக்குனர்களில் 100% பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அட்லீ. இவருடைய படங்கள் என்னதான் விமர்சனத்திற்கு உள்ளானாலும் வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
தோல்வி படங்களை கொடுக்காத 4 இயக்குனர்கள்
அந்த வகையில் அவரது முதல் படமான ராஜா ராணி தொடங்கி மெர்சல், பிகில், தெறி, ஜவான் என அனைத்துமே ஹிட்டு தான். அதிலும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம் ஆயிரம் கோடி தாண்டி வசூல் செய்து மாபெரும் வெற்றியை அடைந்தது.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தனது மாநகரம் படம் தொடங்கி கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்கள் மூலம் தொடர் வெற்றியை கொடுத்திருக்கிறார். இப்போது ரஜினியுடன் கூட்டணி போட்டு கூலி என்ற படத்தை எடுத்து வருகிறார்.
அதேபோல் இயக்குனர் வெற்றிமாறன் இதுவரை சினிமாவில் தோல்வியை சந்தித்ததில்லை. அதாவது தான் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை,, வடசென்னை, அசுரன், விடுதலை என அனைத்துமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது விடுதலை 2 படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
மாரி செல்வராஜை திரும்பிப் பார்க்க வைத்த வாழை
- ஒரே நாளில் மோதிய சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ்
- பரியேறும் பெருமாள், கர்ணன் வரிசையில் மற்றொரு படைப்பு
- ஏழைகளின் வலி, பாலா கட்டிப்பிடித்து கண் கலங்கிய வாழை எப்படி இருக்கு.?