Rajini: சோசியல் மீடியா பிரபலமாக இருக்கும் ப்ளூ சட்டை மாறன் சமீப காலமாக பெரும் புள்ளிகளை சீண்டி கொண்டிருக்கிறார். அதிலும் ரஜினி, விஜய் ஆகியோரை கிண்டல் அடிப்பது என்றால் இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி.
இவர்கள் நடிக்கும் படங்களை மோசமாக விமர்சனம் செய்வதிலிருந்து தனிப்பட்ட விஷயம் வரை அனைத்தையும் ரோஸ்ட் செய்து வருகிறார். இதற்கு ரசிகர்கள் தரமான பதிலடியையும் அவ்வப்போது கொடுத்து வருகின்றனர்.
ஆனால் எதற்குமே நான் அஞ்ச மாட்டேன் என்பது போல் அவர் தற்போது ரஜினியை கிண்டல் அடித்து ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் தமிழ்நாட்டை மாத்த அரசியலுக்கு வரப்போறதா சொன்னாரு.
ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு
கடைசியில ஓய்வு தேவைப்படுது டாக்டர்கள் சொன்னாங்கன்னு கட்சி ஆரம்பிக்கிறத கேன்சல் பண்ணாரு. ஆனா இப்ப ஓய்வே இல்லாம ஆக்ஷன் படங்களா நடிச்சு தள்ளிக்கிட்டு இருக்காரு என ஒரு பதிவை போட்டுள்ளார்.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இதற்கு இடையில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்த லால் சலாம் படமும் வெளிவந்து வரவேற்பு பெறாமல் போனது. ஆனாலும் தலைவர் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகளில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இதைத்தான் ப்ளூ சட்டை மாறன் கிண்டல் அடித்துள்ளார். அதேபோல் விஜயின் அரசியல் வருகையையும் அவர் தொடர்ந்து நக்கல் செய்து வருகிறார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் இவர் மேல் கொல காண்டில் இருக்கின்றனர்.
ரஜினியை சீண்டும் ப்ளூ சட்டை மாறன்
- விஜய்யால தொட கூட முடியாத உச்சத்தில் ரஜினி
- சர்ச்சையை கிளப்பி தானே குழியில் விழுந்த சிவகார்த்திகேயன்
- ரஜினியை வைத்து இயக்கப் போகும் மாரி செல்வராஜ்