வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சர்ச்சையை கிளப்பிய ரஜினியின் பேச்சு.. கொதித்துப் போன துரைமுருகனை கூல் செய்த சூப்பர் ஸ்டார்

Rajini: சமூக வலைதளங்களில் நேற்று முதலே சூப்பர் ஸ்டார் ட்ரெண்ட் ஆகி வருகிறார். இதற்கு முக்கிய காரணம் கலைஞர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் பேசிய ஒரு விஷயம் பேசு பொருளாக மாறியது.

அதாவது வகுப்பில் நல்ல ரேங்க் வாங்கிய மாணவர்கள் எல்லாம் இன்னும் வகுப்பை விட்டு வெளியேறாமல் இருக்கிறார்கள் என கூறியிருந்தார். இது மூத்த அரசியல்வாதிகளை குறிக்கும் வகையில் இருந்தது.

இந்த பேச்சுக்கு மேடையில் பலத்த சிரிப்பொலியும் எழுந்தது. அதே சமயம் சில சலசலப்பும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகனிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. உடனே அவர் சினிமாவிலும் பல்லு போன நடிகர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என போற போக்கில் பதிலடி கொடுத்திருந்தார்.

ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்த ரஜினி

இதன் மூலம் சூப்பர் ஸ்டாரை அவர் குத்தி காட்டி இருக்கிறார் என அனைவருக்குமே புரிந்தது. அதை தொடர்ந்து மீடியாவில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி பதில் கொடுத்துள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர். அவர் என்ன சொல்லி இருந்தாலும் எனக்கு அதில் எந்த வருத்தமும் கிடையாது. எங்கள் நட்பு தொடரும் என எஸ்கேப் ஆகும் விதமாக கூறியுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் இதுதான் தலைவரின் மனசு என கொண்டாடி வருகின்றனர். ஆனால் அரசியல் வட்டாரத்தில் விஷயம் பெரிதானதால் அவர் மழுப்பலாக பதில் அளித்ததாக பேசி வருகின்றனர். மேலும் ரஜினியிடம் விஜயின் அரசியல் வருகை குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.

ஆனால் தலைவரோ அதற்கு வாழ்த்துக்கள் என்பதோடு முடித்துக் கொண்டார். இப்படியாக துரைமுருகனின் கோபத்தை சூப்பர் ஸ்டார் கூல் செய்துள்ளார். இதனால் சோசியல் மீடியா சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சர்ச்சையை முடித்து வைத்த சூப்பர் ஸ்டார்

Trending News