ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ராஜியால் மோசமான வில்லனாக மாறிய முத்துவேல்.. பாண்டியனை ஏமாற்றியதால் மருமகளுக்கு ஏற்பட்ட விபரீதம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் சரவணன் உடன் ரொமான்ஸ் ஆக எடுத்த போட்டோக்களை தெரியாத்தனமாக குரூப்பில் இருக்கும் அனைவருக்கும் அனுப்பி விடுகிறார். இதனால் செந்தில் மற்றும் கதிர் அதை டெலிட் பண்ண சொல்லி சரவணனுக்கு ஃபோன் பண்ணுகிறார்கள். அதன் பிறகு தான் சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு புரிகிறது அனைத்து போட்டோக்களும் போயிருக்கிறது என்று.

உடனே பதட்டத்தில் அனைத்து போட்டோக்களையும் டெலிட் பண்ண போகும்போது தங்கமயில் மாற்றி டெலிட் பண்ணி விடுகிறார். இதனால் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் பார்த்து தங்கமயில் மற்றும் சரவணனை கிண்டல் பண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். அதே மாதிரி இந்த போட்டோக்களை பாண்டியனும் பார்த்து வெட்கப்பட்டு எதுவும் சொல்ல முடியாமல் போய்விட்டார்.

பாண்டியனின் கோபத்திற்கு ஆளான ராஜி

பிறகு கோமதி, தங்கமயில் செய்த காரியத்திற்கு திட்டிவிட்டு கொஞ்சம் கூட மூளையே வேலை செய்யாது போல என்று சொல்லி புலம்புகிறார். அத்துடன் தங்கமயில் மற்றும் சரவணன் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் பொழுது சரவணனுக்கு செந்தில் மற்றும் கதிர் போன் பண்ணி கலாய்த்து பேசுகிறார்கள்.

அதே மாதிரி தங்கமயிலுக்கு மீனா மற்றும் ராஜி போன் பண்ணி கேலியும் கிண்டலும் பண்ணி கலாய்க்கிறார்கள். அடுத்தபடியாக தங்கமயில் அம்மாவும் போன் பண்ணி மகள் செய்தது முதல் முறையாக தப்பு என்று சொல்லி திட்டுகிறார். இதனை தொடர்ந்து ராஜி வழக்கம்போல் டியூஷன் எடுப்பதற்கு போய்க் கொண்டிருக்கிறார். அந்த வழியாக பாண்டியன் மற்றும் பழனிச்சாமி கடைக்கு போய்க் கொண்டிருப்பதால் ராஜியை பார்த்ததும் பேசுகிறார்கள்.

அப்பொழுது எங்கே போகிறாய் என்று கேட்டதற்கு கோச்சிங் கிளாஸ் போகப் போகிறேன் என்று பொய் சொல்லி சமாளித்து விடுகிறார். ஆனால் ராஜி டியூஷன் எடுக்க தான் போயிட்டு இருக்கிறார். இது தெரிந்தால் பாண்டியன் கோபப்படுவார் என்பதால் பொய் சொல்லி ஏமாற்றி விடுகிறார். பிறகு பாண்டியன், நல்லா படிச்சு நல்ல வேலையில தேடணும் என்று வாழ்த்தி விட்டு வேலை பார்க்க போய் விடுகிறார்.

அடுத்ததாக ராஜியின் அம்மா வடிவு கிட்ட முத்துவேல் நகையை கேட்டு அதட்டி பிரச்சனை பண்ணுகிறார். இது சம்பந்தமான பிரச்சனை வீட்டில் போய்க் கொண்டிருக்கும் பொழுது ராஜி டியூஷன் எடுக்கும் அதே வீட்டிற்கு சக்திவேல் போயிட்டு ராஜி டியூஷன் எடுக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.

இந்த விஷயத்தை முத்துவேலிடம் சொல்லி ராஜி டியூஷன் எடுத்து தான் அந்த வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள் என்று சக்திவேல் தவறாக போட்டு கொடுத்து விடுகிறார். அதே சமயம் முத்துவேல், வடிவுவிடம் நகை எங்கே போனது என்று கேட்கும் பொழுது மாரி, நகை அனைத்தும் உங்க பொண்ணு ராஜியிடம் தான் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லிவிடுகிறார்.

இதனால் உச்சகட்ட கோபத்தில் முத்துவேல், பாண்டியன் இடம் சண்டை போட்டு மோசமாக நடந்து கொள்கிறார். அத்துடன் ராஜி டியூஷன் எடுத்து தான் நீங்க உட்கார்ந்து சாப்பிடுறீங்களா? போதாததற்கு என் பொண்டாட்டி நகையும் வாங்கிட்டு அதையும் வச்சுட்டு கூத்தடிக்கிறீங்க என்று வாய்க்கு வந்தபடி திட்டி பாண்டியனை அசிங்கப்படுத்தி பேசுகிறார்கள்.

இது எதுவும் தெரியாத பாண்டியன், ராஜியை பார்த்து அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையா என்று கேட்கிறார். ராஜியும் இதுக்கு மேல பொய் சொன்னால் சரி வராது என்று ஆமாம் என்று உண்மையை போட்டு உடைக்கிறார். பிறகு வழக்கம்போல் பாண்டியனை அவமானப்படுத்தும் அளவிற்கு சரியான சம்பவத்தை ராஜியின் அப்பா சித்தப்பா செய்து விடுகிறார்கள். இதனால் பாண்டியன் எடுக்க போக முடிவு நிச்சயம் கதிர் மற்றும் ராஜிக்கு விபரீதமாக முடியும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News