சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மருமகளின் லட்சணம் தெரியாமல் மச்சான்களிடம் வீராப்பு காட்டும் பாண்டியன்.. மீனா ராஜியிடம் கோவப்படும் கோமதி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி கதிரின் கதையைத் தவிர மற்ற அனைத்தையுமே கொண்டு வந்து கடுப்பேற்றுகிறார்கள். தற்போது முத்துவேல், வடிவுகிட்ட நகை எங்கே போச்சு என்ன பண்ணினாய் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைச்சல் கொடுக்கிறார். ஆனால் வடிவு எந்த காரணத்தை கொண்டும் வாய் திறந்து சொல்லிடக்கூடாது என்று மௌனமாக இருக்கிறார்.

இருந்தாலும் முத்துவேல் விடாமல் நகையை கேட்டு வடிவை டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டார். அப்பொழுது வடிவுக்கு சப்போர்ட்டாக மாரி மற்றும் பாட்டியும் பேசிய நிலையில் முத்துவுக்கு இன்னும் அதிகமாக சந்தேகம் வந்துவிட்டது. இந்த வகையில் நீங்கள் மூன்று பேரும் முழிக்கிற முழியை சரியில்லை. நகை என்ன பண்ணுனீங்க என்று கேட்டு வடிவை அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

பாண்டியனுக்கு தொடர்ந்து அவமானத்தை கொடுத்த ராஜியின் குடும்பம்

அப்பொழுது மாரி, அக்கா நகைகள் எல்லாமே ராஜியிடம் தான் கொடுத்திருக்கிறோம் என்று உண்மையை சொல்லி விடுகிறார். இதனால் கோபப்பட்டு முத்துவேல் என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருக்கும் நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் சக்திவேல், ராஜி ஹோம் டியூஷன் எடுக்கிற விஷயத்தை சொல்லி முத்துவை இன்னும் கோபப்படுத்திவிட்டார்.

உடனே ஒட்டுமொத்த குடும்பமாக வெளியே வந்து பாண்டியனை வம்புக்கு இழுக்க வாய்க்கு வந்த வார்த்தைகள் எல்லாம் பேசி கேவலப்படுத்துகிறார்கள். ஆனாலும் கண்டுகொள்ளாமல் பாண்டியன், பழனிச்சாமியை கூட்டிட்டு கடைக்குப் போக தயாரான நிலையில் சக்திவேல் பாண்டியனின் மரியாதையை அசிங்கப்படுத்தி இழிவு படுத்தி விட்டார்.

இதற்கு மேலேயும் அமைதியாக இருக்கக் கூடாது என்று பொங்கி எழுந்த பாண்டியன், மருமகள் செய்யும் காரியத்தை பற்றி எதுவும் தெரியாததால் மச்சான்களிடம் வீரவசனம் பேசி அதிக கோபத்துடன் வீராப்பு காட்டி விட்டார். இதற்கு தான் நான் காத்துக் கொண்டிருந்தேன் என்று சொல்வதற்கு ஏற்ப சக்திவேல், இந்த சான்சை பயன்படுத்தி வீட்டுக்கு வந்த மருமகளை ஒழுங்கா வச்சு வாழ தெரியாமல் அவர்களை வேலைக்கு அனுப்பி அதில் உட்கார்ந்து சாப்பிட உனக்கெல்லாம் என்ன ரோசம் வேண்டும் என்று தரக்குறைவாக பேசிவிட்டார்.

இதைக் கேட்ட மீனா பக்கத்தில் இருக்கும் ராஜி இடம் நான் வேலைக்கு போறத வச்சு இப்படி பேசுறாங்களா என்று கேட்கிறார். அதற்கு ராஜி, இல்ல நான் டியூஷன் எடுப்பது என் சித்தப்பாவுக்கு தெரிந்து விட்டது. அதை வீட்டில் இருப்பவரிடம் சொல்லி தான் இப்பொழுது பிரச்சினை பண்ணுகிறார் என்று சொல்லுகிறார். உடனே மீனா அதிர்ச்சியாகி அய்யய்யோ என்று பதட்டம் அடைய ஆரம்பித்து விட்டார்.

இதற்கு இடையில் சக்திவேல் என்ன சொல்கிறார் என்று புரியாத பாண்டியன், என்ன உளறுகிறாய் என்று கேட்க சக்திவேல், உன் வீட்டு மருமகளை வீடு வீடாக அனுப்பி டியூஷன் எடுக்க வைத்து அதன் மூலம் நீ உன் பொழப்பை நடத்துகிறார் என்று அசிங்கப்படுத்துகிறார். உடனே பாண்டியன் ராஜியை பார்த்து, அவர் சொல்வது உண்மையா என்று கேட்க ராஜியும் ஆமா என்று தலையாட்டி விடுகிறார்.

இது எதுவும் தெரியாத பாண்டியனுக்கு தற்போது உண்மை தெரிந்ததால் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் மனம் துவண்டு போய் நிற்கிறார். அத்துடன் விடாமல் முத்துவேல் நகை விஷயத்தையும் போட்டு உடைக்கிறார். அந்த வகையில் ஏற்கனவே என் மகளை கூட்டிட்டு போகும் பொழுது அவளுடைய நகையை பணத்தையும் எடுத்துட்டு அதை செலவழித்து விட்டீர்கள்.

அது போதாது என்று தற்போது என் மனைவியின் நகையும் வாங்கி வச்சுக்கிட்டு இருக்கிற, உனக்கு எல்லாம் என்ன மரியாதை என்று கடுமையான வார்த்தைகளை வைத்து மோசமாக பேசி விடுகிறார். அந்த வகையில் ராஜி வாங்கின நகை பற்றியும் பாண்டியனுக்கு எதுவும் தெரியாததால் மொத்தமாக மருமகள் செய்த குளறுபடிகளால் தற்போது பாண்டியன் அவமானப்பட்டு கூனி குறுகிப் போய் நிற்கிறார்.

இதெல்லாம் தெரிந்தும் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கோமதி, மீனா மற்றும் ராஜியிடம் கோபப்படுகிறார். எல்லாத்தையும் சொல்ற என்னிடம் ஏன் டியூஷன் எடுக்க போகிற விஷயத்தை சொல்லவில்லை என்று மீனா மற்றும் ராஜியை திட்டுகிறார். இதனை தொடர்ந்து இந்த விஷயம் எல்லாம் தங்கமயிலுக்கு தெரிய வரும் பொழுது இதற்காகத்தான் நான் மாமாவிடம் எந்த உண்மையையும் மறைக்காமல் எல்லாத்தையும் சொன்னேன்.

நான் சொல்லும் பொழுதெல்லாம் நீங்கள் கோபப்பட்டு என்னை தள்ளி வைத்தீர்கள். இப்பொழுது புரிதா நான் எதற்காக அப்படி பண்ணினேன் என்று கிடைக்கிற கேப்பில் நல்ல மருமகள் போல ஸ்கோர் பண்ணி விடுகிறார். ஆனால் இந்த தங்கமயில் எப்பொழுது பித்தளை மயிலாக ஆகப் போகிறார் என்பது தான் தெரியவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -

Trending News