2022 ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கிராண்ட் சேர்ட்டன் ஓட்டலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணம் முடிந்தது. அதே ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் நயன்தாரா. இப்பொழுது அவர்கள் குழந்தைகளுக்கு இரண்டு வயதாகிவிட்டது.
2022இல் அவர்கள் கல்யாணம் நடந்த போது அதில் எடுத்த வீடியோக்களை, ஒரு பெரும் தொகையை வாங்கிக் கொண்டு நெட்பிலிக்ஸ்க்கு, நயன்தாரா விக்னேஷ் சிவன் விற்று விட்டனர். நெட்பிலிக்ஸ் அவர்கள் கல்யாணத்தை ஒளிபரப்பும் உரிமையை கைப்பற்றியது. ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் இன்று வரை அதை ஒளிபரப்பவில்லை.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் காதல் மலர்ந்தது நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம் தான். விஜய் சேதுபதி ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினாகவும் இந்த படத்தில் நடித்திருந்தனர். விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கியிருந்தார். இது ஒரு காமெடி கலந்த காதல் திரைப்படமாக வெளிவந்தது.
இந்த படத்தை தயாரித்தது தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தான். விக்னேஷ் சிவன் தன்னுடைய கல்யாண வீடியோவில் இந்த படத்தில் உள்ள பல காட்சிகளை எடிட் செய்து இணைத்துள்ளார். அது மட்டும் இன்றி படத்தில் சேர்க்கப்படாத, ஷூட்டிங்கில் நடைபெற்ற சில சுவாரசியமான விஷயங்களையும் இணைத்துள்ளார்.
தண்டமாய் வாங்கிய நெட்பிலிக்ஸ்
அப்படி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடக்கூடியதாய் அந்த வீடியோவை தயாரித்துள்ளார் விக்னேஷ் சிவன். இப்பொழுது இந்த வீடியோவை ஒளிபரப்ப வேண்டுமென்றால் படத்தின் தயாரிப்பாளராகிய தனுஷ் அனுமதி கொடுக்க வேண்டும். இந்த வீடியோவில் “நானும் ரவுடிதான்” படக் காட்சிகளையும் இணைத்ததால் விக்னேஷ் சிவனுக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
பலமுறை விக்னேஷ் சிவனும்-நயன்தாராவும் கேட்டும் கூட இதுவரை தனுஷ் அவர்களுக்கு அந்த அனுமதியை வழங்கவில்லை. நெட்ப்ளிக்ஸ் இதை தண்டமாய் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கி பெட்டியில் பூட்டி வைத்திருக்கிறது. தனுஷ் கையில் தான் இப்பொழுது இவர்கள் வீடியோ ஒளிபரப்பும் உரிமை இருக்கிறது.
- லேடி சூப்பர் ஸ்டார் புருஷனா சும்மாவா
- நயன்தாராவின் குழந்தையை சுமந்த தாய் யார் தெரியுமா.?
- நயன்தாராவின் சினிமா வாழ்க்கையை காலி செய்த விக்னேஷ் சிவன்