புதன்கிழமை, ஜனவரி 15, 2025

துரை அய்யா உடனுக்குடன் ரஜினிக்கு கொடுத்த பதிலடியை இதுல காட்டிருக்கலாம்.. இயற்கையை வாரி தின்னும் இலாகா!

Durai murugan and Rajinikanth: கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி இருப்பது “கலைஞர் எனும் தாய்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி, பொது மேடையில் அமைச்சர் துரைமுருகனை பற்றி கிண்டலடித்து பேசி இருந்தார். அதாவது ஒரு பள்ளியில் புதுசாக சேர்ந்திருக்கும் டீச்சருக்கு புது மாணவர்களை சமாளிப்பது ரொம்பவே சுலபம். ஆனால் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் நான் அந்த பள்ளிக்கூடத்தை விட்டு போக மாட்டேன் என்று அடம் பிடித்து இருக்கும் பழைய மாணவர்களை சமாளிப்பது தான் சாமர்த்தியம் வேண்டும் என்று ரஜினி, துரைமுருகனை பற்றி கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக துரைமுருகன், ரஜினி சொன்னது போல தான் நானும் அவருக்கு சொல்லுகிறேன். பல்லு போன வயசான கிழவன்கெல்லாம் ஒதுங்கி விட்டால் இளைஞர்களுக்கு நடிக்க வாய்ப்பாக அமையும் என்று கூறியிருந்தார். இப்படி ரஜினி சொன்ன விஷயத்துக்கு உடனுக்குடனே பதிலடி கொடுக்கும் விதமாக அதிரடியான பஞ்ச் டயலாக்கை கொடுத்திருந்தார் துரைமுருகன்.

சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் கல்குவாரியின் விதிமீறல்கள்

ஆனால் தற்போது இதைவிட இன்னொரு விஷயம் மிகப் பெரிய பூகம்பமாக வெடித்து வருகிறது. அதாவது ரஜினி சொன்ன விஷயத்துக்கு பதிலடி கொடுக்கத் தெரிந்த துரை ஐயாவுக்கு கனிமவளத்துறையில் நெல்லை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சட்டவிரோதமான அதிகமாக கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள் சம்பந்தமான அறப்போர் புகார் பற்றி இதுவரை ஒரு வார்த்தை கூட அவரால் பேச முடியவில்லை, இதற்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை.

சட்டவிரோதமான விஷயங்களை மட்டும் பேச வரும்போது அவருடைய தொண்டை அடைத்து விடுகிறதா? தமிழ்நாட்டின் கனிம வளங்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால் நெல்லையில் சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் குவாரிகளை இழுத்து மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் ரஜினி சொன்னது போல் அக்கறையுடன் ஆர்வமாக வேலை செய்ய துடிக்கும் இளைஞர்களிடம் பொறுப்பை கொடுத்து விட்டு நீங்கள் ஒதுங்கி விடுங்கள் என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நெல்லை மாவட்டத்தில் நடந்த கல்குவாரி விபத்து தான். அளவுக்கு அதிகமாக தோண்டப்பட்டது தான் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் காயம் அடைந்தவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து அந்தப் பிரச்சினையை மூடி மறைத்து விட்டார்கள். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது.

இங்கே விதிகளை மீறி இரவு நேரத்திலும் அந்த பகுதியில் குவாரி செயல்பட்டு வருகிறது. அதனால் அவ்வப்போது பாறைகள் உருண்டு விழுந்து அங்கே வேலை பார்ப்பவர்கள் உயிருக்கே மிகப்பெரிய ஆபத்தாக முடிகிறது. ஆனால் இதற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து இந்த மாதிரி இயற்கையை வாரி தின்னும் சம்பவங்கள் நடைபெற்றே வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் துரைமுருகன் எங்கேயோ நடக்கும் விபத்து தானே என்று இதெல்லாம் கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்.

Trending News