Mettioli Actress: கேரள நடிகர்களின் முகத்திரையை கிழிக்கும் பொருட்டு நடிகைகள் ஒன்று சேர்ந்துள்ளது தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களாக மலையாள நடிகர்களான சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் மீது அட்ஜஸ்ட்மென்ட் புகார் எழுந்து வருகிறது.
இதில் கோலிவுட் வில்லன் நடிகர் ரியாஸ்கான் பெயரும் சிக்கியது. இதற்கு அவர் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்த நிலையில் மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமான சாந்தி வில்லியம்ஸ் அதிர வைக்கும் பல உண்மைகளை புட்டு புட்டு வைத்துள்ளார்.
அதன்படி மலையாள இண்டஸ்ட்ரி பற்றி பேசவே எனக்கு பிடிக்கவில்லை. அங்கு இருக்கும் நடிகர்கள் 90 வயது கிழவியை கூட விட்டு வைக்க மாட்டார்கள். அடுத்த ராத்திரியில் வந்து ரூம் கதவை தட்டும் பழக்கமும் இருக்கிறது என கூறியுள்ளார்.
சாந்தி வில்லியம்ஸ் கூறிய உண்மை
மேலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் பெண்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக இதற்கு தள்ளப்படுகிறார்கள். இப்போது புகார் கொடுத்து இருக்கும் யாரும் இன்டஸ்ட்ரியில் கிடையாது. ஏனென்றால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனால் ஒரு விஷயத்தை செய்யும்போது யோசித்து தான் செயல்பட வேண்டும். அதேபோல் நடிகைகளை புழு போல் கேவலமாக பார்க்கிறார்கள். அவர்களுக்கும் தனிப்பட்ட ஒரு வாழ்வு இருக்கு என்பது யாருக்கும் தெரியவில்லை என ஆதங்கத்துடன் கூறியிருந்தார்.
அது மட்டும் இன்றி ஆந்திராவில் நடிகைகள் ரொம்பவும் மரியாதையாக நடத்தப்படுகிறார்கள். சமீபத்தில் நடிகை சங்கீதா கூட இதை பற்றி சொல்லியிருந்தார். அதற்கு என்னுடைய சப்போர்ட் உண்டு என திரையுலகம் பற்றிய பல விஷயங்களை பேசி இருக்கிறார்.
தற்போது கேரளா அம்மா அமைப்பின் தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்திருக்கும் நிலையில் 17 நிர்வாகிகளும் கூண்டோடு பதவி விலகியுள்ளனர். இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இன்னும் சில நடிகர்களின் பெயர்கள் வெளிவரும் என திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.
மலையாள நடிகர்களின் முகத்திரையை கிழித்த பிரபலம்
- வாயை திறக்காத லாலேட்டன், விஸ்வரூபம் எடுத்த விவகாரம்
- மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 5 மலையாள படங்கள்
- என் கூட தூங்குனவங்க எல்லாம் டாப் ஹீரோக்கள்