Bhakkiyalakshmi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி வயிற்றெரிச்சல் படும் அளவிற்கு பாக்கியா, ஈஸ்வரி மற்றும் மாமனாருக்கு 80 ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்தி முடித்து விட்டார். அத்துடன் ஒட்டுமொத்த குடும்பமாக சேர்ந்து ஒன்றாக சாப்பிடுவது பேசுவது போன்ற அனைத்து விஷயங்களையும் சந்தோசமாக செய்து வருகிறார்கள்.
இதை தூரத்திலிருந்து ஓரமாக நின்னு வேடிக்கை பார்க்கும் கோபி, அப்பா அம்மா சந்தோஷமாக இருப்பதை பார்த்தாலும் இதில் நாம் போய் கலந்து கொள்ள முடியவில்லை என்று புலம்பும் அளவிற்கு கோபத்துடன் இருக்கிறார். அத்துடன் இனியாவை பற்றி கோபியிடம் ஈஸ்வரி நடந்த உண்மையை சொல்லிவிட்டார். அதாவது நீ எந்த விதத்திலும் ஒரு தகப்பன் என்கிற அந்தஸ்துக்கு தகுதி இல்லை.
பாக்கியாவிடம் வன்மத்துடன் நடந்து கொள்ளும் கோபி
உன் சந்தோசம் தான் முக்கியம் என்று குடும்பத்தை பற்றி யோசிக்காமல் ராதிகா பின்னாடி போனாய். அதன்பிறகு யாருக்கு என்ன நடந்தது என்று உனக்கு தெரியுமா? இனியா பப்பில் மாட்டிய விஷயம் மட்டும் தான் உனக்கு தெரியும். காலேஜ்ல நடந்த பிரச்சினைக்கு நீ ஏதோ இனியாவிற்காக வந்து நின்றாய். ஆனால் அங்கேயும் உனக்கு முன் பாக்கியா தான் ஒரு சிறந்த அம்மாவாக இனியாவை காப்பாற்றினார்.
அதோடு இந்த பிரச்சனை முடியவில்லை இனியா யாருக்கும் தெரியாமல் லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு போக பார்த்தால். அப்பொழுது பாக்கியா தான் இனியவை தடுத்து நிறுத்தி நல்ல புத்திமதி சொல்லி இருக்கிறார். அன்னைக்கு மட்டும் பாக்கியா கவனிக்கவில்லை என்றால் இனியாவை நாம் அனைவரும் இழந்து இருப்போம் என்று கூறினார்.
இதைக் கேட்டதும் மகள் பாசத்தில் கோபி அழுது புலம்ப ஆரம்பித்து விட்டார். என் தங்கம் இனியா இல்லாமல் நான் எப்படி இருப்பேன். கொஞ்சம் என்னை பற்றி யோசித்து இருக்கிறாளா என்று இனியாவை தூரத்தில் நின்று பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்துக் கொள்கிறார். இதனைத் தொடர்ந்து பாக்கியாவை தனியாக பார்த்த கோபி, அட்லீஸ்ட் இந்த ஒரு விஷயத்துக்கு பாராட்டு மனசு இல்லை என்றாலும் கோபப்படாமல் திட்டாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் எப்பொழுதும் கோபி மாறவே மாட்டார் என்பதற்கு ஏற்ப பாக்கியாவை பார்த்ததும் வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்து விட்டார். இப்போ உனக்கு சந்தோஷமா, என் குடும்பத்தை என்னிடம் இருந்து பிரித்து விட்டாய். என் மீது அதிக பாசம் வைத்திருந்த என் அம்மாவையும் வெறுக்க வைத்து விட்டாய். என்னை இப்படி தனி மரமாக நிற்க வைத்து விட்டாய் என்று பாக்கியாவிடம் சண்டை போடுகிறார்.
அதற்கு பாக்கியா, எல்லாத்துக்கும் காரணம் நான் இல்லை நீங்கள் செய்த காரியம் தான் உங்களை இப்படி இந்த நிலைமைக்கு நிற்க வைக்கிறது. தேவையில்லாமல் என்னிடம் சண்டை போடாமல் விரும்பிய வாழ்க்கையே சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் கடைசியில் ராதிகாவும் இல்லாமல் தனியாகத்தான் நிற்கும் படி நிலைமை வந்து விடும் என்று சொல்கிறார்.
அதற்கு கோபி, என்னை விட்டு ராதிகா ஒருபோதும் போக மாட்டாள் அது எனக்கு தெரியும். ஆனால் இப்பொழுது எப்படி என்னுடைய குடும்பத்தை என்னிடம் இருந்து பிரித்து தனியா ஆக்கினியோ, அதே மாதிரி உன்னையும் தனி மரமாக நிற்க வைக்கிறேன் என்று சவால் விடும் அளவிற்கு கோபி துணிந்து விட்டார். அந்த வகையில் இனி பாக்யாவிடம் இருந்து பிள்ளைகளை பிரிக்கும் விதமான ஏதாவது தில்லாலங்கடி வேலையை செய்யப் போகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் ஈஸ்வரி
- ராதிகா விட்ட சாபத்தால் அல்லல்படும் கோபி
- மகனை அவமானப்படுத்திய ஈஸ்வரி, பாக்யாவை பழிவாங்க போகும் கோபி