ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மாத்தி கொடுக்கப் போகும் நகையால் மாட்டும் பாண்டியனின் மருமகள்.. கையும் களவுமாக சிக்கும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி யாருக்கும் தெரியாமல் டியூஷன் எடுத்த விஷயமும், நகையை வடிவிடம் வாங்கியது பற்றியும் பாண்டியன் வீட்டிற்குள் வைத்து ராஜியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு பிரச்சினை பண்ணுகிறார். அத்துடன் ராஜி இது எல்லாம் கதிர்காக தான் நான் செய்தேன் என்று சொல்லிய நிலையில் கதிர், நீ ஏன் எல்லாரிடமும் பொய் சொல்லிட்டு டியூஷன் எடுத்தாய்.

நீ செய்த வேலை ஒன்னும் தப்பான விஷயம் இல்லை, அதனால் எல்லோரிடமும் சொல்லிட்டே நீ செய்திருக்கலாம் என்று சொல்கிறார். அப்பொழுது மீனா, ஆரம்பத்தில் ராஜி அனைவரிடமும் சொல்லி டியூஷன் எடுக்கும் ஆர்வத்தை பற்றி மாமாவிடம் பெர்மிஷன் கேட்டிருந்தார். ஆனால் மாமா பெர்மிஷன் கொடுக்காததால் ராஜிக்கு வேற வழியில்லை. அதனால் ஹோம் டியூஷன் எடுக்க முடிவு பண்ணினாள் என்று சப்போர்ட்டாக பேசுகிறார்.

ராஜியை காப்பாற்ற வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட மீனா

இப்படி மீனா சப்போட்டாக பேசும்போது அனைவரும் வாயடைத்து நின்று விட்டார்கள். அத்துடன் கோமதி, அப்படி என்றால் ராஜி டியூஷன் எடுப்பதற்கு நீ தான் காரணமா? உனக்கு முன்னாடியே தெரியுமா நீதான் அவளுக்கு உதவி பண்ணினாய் என்று கேட்கிறார். அதற்கு மீனா ஆமாம் என்று சொல்லிய நிலையில் ராஜி, மீனாவை காப்பாற்றும் விதமாக அக்காவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அக்கா என்னை காப்பாற்றுவதற்காக பொய் சொல்கிறார்கள் என்று சமாளிக்கிறார். ஆனால் மீனா, நான் தான் இந்த ஏற்பாடு பண்ணி கொடுத்தேன் என்று சொல்லிய நிலையில் செந்தில் மீனாவை திட்டுகிறார். எந்த ஒரு விஷயமும் பெரியவங்க கிட்ட கேட்டு பண்ணனும் உனக்கு தெரியாதா? உன் இஷ்டத்துக்கு தான் எல்லாமே பண்ணுவியா என்று கேட்கிறார்.

உடனே பாண்டியன், மீனா உதவி பண்ணி இருக்கிறார் என்று தெரிந்ததும் பொங்க ஆரம்பித்து விட்டார். நான் நினைச்சேன் இதுக்கெல்லாம் காரணம் நீயாக தான் இருப்பாய் என்று அதே மாதிரி நடந்திருக்கிறது. நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்காத, இந்த ராஜியை கெடுக்கதே நீதான் என்று மீனாவை திட்ட ஆரம்பித்து விடுகிறார். அப்பொழுது கோமதியும், மீனா மற்றும் ராஜியை திட்டி கோபப்பட்டு பேசுகிறார்.

இதனை தொடர்ந்து செந்தில் மற்றும் கதிர், பொண்டாட்டிகள் செய்த தவறுக்காக பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு தலை குனிந்து நிற்கிறார்கள். அடுத்ததாக பாண்டியன், கோமதி இடம் நாளைக்கு நகையை லாக்கரிலிருந்து எடுத்து அவர்களிடம் திருப்பிக் கொடுத்து விடு என்று சொல்கிறார். அதன்படி கோமதி நகை எடுக்கப் போகும் பொழுது சில நகைகள் மாற்றிக் கொடுக்கப் போகிறார்.

அதில் ஒரு நகையாக தங்கமயிலின் நகை ராஜியின் அப்பாவிடம் சேர போகிறது. இதை வாங்கியதும் சக்திவேலுக்கு போலி நகைகள் என்று தெரிய வரப்போகிறது. அதன் மூலம் மறுபடியும் ராஜி அப்பா மற்றும் சித்தப்பா சேர்ந்து பாண்டியனை அசிங்கப்படுத்தி பேச போகிறார்கள். அப்பொழுது பாண்டியன் அது யார் நகை என்று பார்க்கும் பொழுது தான் தெரிய வரப்போகிறது இது தங்கமயில் நகை என்று.

பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் தங்கமயிலின் அனைத்து நகைகளையும் செக் பண்ணி பார்க்க போகிறார்கள். அப்பொழுது கையும் களவுமாக தங்கமயில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதன்படியே இந்த கதைகள் விறுவிறுப்பாக அடுத்தடுத்து நகர்ந்தால் டிஆர்பி ரேட்டிங்கில் ஒரு படி முன்னுக்கு வந்துவிடும். இதை தான் மக்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News