ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

கண் கலங்க வைத்த சிறுவன்.. முழு அரசியல்வாதியாக மாறிய TVK விஜய், கண்சிமிட்டும் நேரத்தில் செய்த வேலை

Vijay: விஜய் இன்னும் ஒரு படத்தோடு சினிமாவுக்கு குட்பை சொல்ல இருக்கிறார். அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள அவர் இப்போது மக்கள் பணிக்கான நடவடிக்கைகளை அதிவேகமாக மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் கட்சி கொடி, பாடல் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய இவர் தன்னுடைய முதல் மாநாட்டிற்கும் தயாராகி விட்டார். விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி பிரம்மாண்ட மாநாடு நடைபெற இருக்கிறது.

இதற்கான வேலைகள் ஒரு பக்கம் தீவிரம் ஆகி வரும் நிலையில் விஜய் மக்களின் பிரச்சனைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் பேசியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

அந்த நிகழ்ச்சியில் தன் அம்மாவுக்காக மூட்டை தூக்கும் மாணவன் தன்னுடைய கஷ்டங்களை பற்றி பகிர்ந்திருந்தார். அதில் அம்மாவுக்கு மெத்தை வாங்கி கொடுக்கணும். நல்ல இடத்தில் வச்சு பார்த்துக்கணும் என குறிப்பிட்டு இருந்தார்.

நீயா நானாவில் கண்கலங்க வைத்த சிறுவன்

மேலும் 10 கிலோ எடை கொண்ட மூட்டையை தூக்குவேன். பஸ் கிடைக்கலன்னா 3 கிலோமீட்டர் நடந்தே வருவேன் என உருக்கமாக பேசி இருந்தார். இது விஜய் கவனத்திற்கு வந்த நிலையில் புஸ்ஸி ஆனந்துக்கு அவர் அதிரடியாக உத்தரவு ஒன்றை போட்டுள்ளார்.

அதன்படி அந்த சிறுவன் 15,000 உதவி கேட்ட நிலையில் இரண்டு நிமிடத்தில் 25 ஆயிரம் அனுப்பப்பட்டிருக்கிறது. உடனடியாக மெத்தையும் வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களும் கொடுக்கப்பட்டது.

அது மட்டும் இன்றி மாணவனின் அடுத்த மூன்று வருடத்திற்கான படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக விஜய் கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து விஜய் கட்சி கொடி அறிவிக்கும் நாளில் அந்த மாணவன் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இதைப் பற்றி சந்தோஷமாக தெரிவித்து இருக்கும் சிறுவனின் தாய் விஜய்க்கு தன் நன்றியையும் தெரிவித்துள்ளார். தற்போது இது மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஆனால் ஒரு சிலர் பப்ளிசிட்டிக்காக இதை செய்வதாகவும் கூறி வருகின்றனர்.

மாணவனுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய்

Trending News