Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சில மாதங்களுக்கு முன் இதன் டைட்டில் வீடியோ வெளிவந்த நிலையில் நேற்று மலையாள நடிகர் சௌபின் இணைவதாக போஸ்டர் உடன் அறிவிப்பு வெளியானது.
அதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா இணைந்துள்ள அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் ஆடியன்ஸ் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் அப்டேட் தான்.
அதன்படி சன் பிக்சர்ஸ் இவரை தேர்வு செய்ததற்கு சில காரணங்கள் இருக்கிறது. அதாவது இப்படம் பான் இந்தியா லெவலில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது. இதன் மூலம் லோகேஷ் அடுத்த நிலையை தொட இருக்கிறார். அப்படி என்றால் கதாபாத்திரங்களின் தேர்வு யாரும் எதிர்பாராத வகையில் இருக்க வேண்டும்.
லோகேஷின் பான் இந்தியா திட்டம்
அதற்காகவே சில மாதங்கள் அவர் நேரம் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் செலக்ட் செய்துள்ளார். அதன்படி தெலுங்கு ஆடியன்ஸை மொத்தமாக கவர் செய்ய வேண்டும் என்பதற்காகவே பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில் நாகார்ஜுனாவின் கால்ஷீட் ஒத்துப்போன நிலையில் படத்தின் கதையும் பிடித்ததால் அவர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் சூப்பர் ஸ்டார் படம், பான் இந்தியா லெவலில் ரீச் இருக்கும் என்பதால் சம்பள விஷயத்திலும் அவர் கெடுபிடி காட்டவில்லை.
ஏற்கனவே தனுசுடன் இணைந்து குபேரா படத்தில் இவர் நடித்து வருகிறார். இதில் தற்போது ரஜினியுடன் அவர் கைகோர்த்து இருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் சைமன் என்னும் கேரக்டரில் நடிக்கும் இவர் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக இருக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் நாகார்ஜுனா
- அட்லீய விட லோகி தான் மாஸ்
- ரஜினியை வைத்து இயக்கப் போகும் மாரி செல்வராஜ்
- லோகேஷ், ரஜினிக்கு நோஸ்கட் கொடுத்த மாஸ் ஹீரோ