சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சிறுத்தை சிவா கதறியும் வழி விடாத அண்ணாத்த.. ஞானவேலுவை வார் பிடித்த ரஜினி

ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜின் கூலி படத்திற்கு ரெடியாகி வருகிறார். ஆனால் இன்னும் வேட்டையன் படம் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் முடிந்த பாடு இல்லை. இதன் வேலைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள் ஞானவேல் மற்றும் லைக்கா சுபாஸ்கரன்.

ஆயுத பூஜை வெளியிடாக வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளி வருகிறது. ஆனால் இந்த படத்தில் இன்னும் வி எஃப் எக்ஸ் வேலைகள் மீதம் இருக்கிறது. அதனால் அக்டோபர் 10 வெளிவருவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே ரஜினி ரிஷிகேஷ் சென்ற இடத்தில் சாதுக்களிடம் ஆசி பெற்று இந்த படத்தை 10தாம் தேதி ஆயுத பூஜைக்கு வெளியிடுவதாக கூறியுள்ளார்.

வேட்டையன் ரிலீஸ் ஆகும் அதே தேதியில் சிறுத்தை சிவாவின் கங்குவா படமும் வெளி வருவதாக இருந்தது. அதன்பின் ரஜினிகாந்த் படம் என்பதால் தியேட்டர்கள் மற்றும் வசூலை யோசித்து கங்குவா படம் பின் வாங்கியது. ஆனால் சிறுத்தை சிவாவும் அதே தேதியை மனதில் வைத்து பல ஏற்பாடுகளை செய்து வந்தார்.

சிறுத்தை சிவா அண்ணாத்த படம் ரஜினியை வைத்து இயக்கினார். அந்த நட்பு காரணமாக ரஜினிக்கு போன் செய்து நீங்கள் வேட்டையன் படத்தை கொஞ்சம் தாமதமாக வெளியிடுவதற்கு ஏதாவது வழி உண்டா என்று கூட கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்து நீங்களும் கங்குவா படத்தை திரையிடுங்கள். இரண்டு படங்கள் மோதிக் கொண்டால் ஒரு பிரச்சனையும் வராது என்று அனுப்பியுள்ளார்.

ஞானவேலுவை வார் பிடித்த ரஜினி

சிவா எவ்வளவோ சொல்லி பார்த்தும் ரஜினிகாந்த் அந்த தேதியை விடுவதாக இல்லை. இப்பொழுது வி எப் எக்ஸ் வேலைகளை வெகு விரைவாக முடிக்கும்படி ஞானவேல் மற்றும் லைக்காவை வார் பிடித்து வருகிறார். அண்ணாத்த நட்பு கூட சிறுத்தை சிவாவிற்கு வேலை செய்யவில்லை.

Trending News