ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

2024 தடபுடலா ஆரம்பித்து குப்பையில் போடப்பட்ட 8 படங்கள்.. 2ஆம் இன்னிங்ஸில் ஓய்ந்து போன அரவிந்த்சாமி

இதுவரை தமிழில் நூற்றுக்கணக்கான படங்கள் அலமாரியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பெரிய ஹீரோக்கள் படங்கள் கூட, பண பற்றாக்குறை, வியாபாரம் இல்லாமல், சண்டை இப்படி ஏதாவது பிரச்சனை காரணமாக வெளிவராமல் நஷ்டப்பட்டு கிடக்கிறது. இந்த பிரச்சனை எல்லாம் கடைசியில் தயாரிப்பாளர்கள் தலையில்தான் இடியாய் விழுகிறது. அப்படி தமிழில் கைவிடப்பட்டு குப்பையில் போடப்பட்ட 5 படங்கள்,.

சுமோ: ஐசரி கணேசனின் வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. மிர்ச்சி சிவா, விடிவி கணேஷ், யோகி பாபு போன்றவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். முழு நீள காமெடி படமாக இதை இயக்கி உள்ளனர். இந்த படம், இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கையில் மீண்டும் இதை பூட்டி வைத்துள்ளனர்.

அக்னி சிறகுகள்: இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இந்த படம் வெளி வருகிறது என புரளியை கிளப்பி வந்தனர். விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இயக்குனர் நவீன் இயக்கிய இந்த படத்தில் நாசர், பிரகாஷ்ராஜ் சமுத்திரகனி போன்றவர்கள் நடித்துள்ளனர்.

துருவ நட்சத்திரம்: கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் விக்ரம் நடித்து முடித்த இந்த படம் பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு வெளிவருவதாக இருந்தது. ஆனால் பணப்பிரச்சனை காரணமாக இந்த படத்தை வெளியிடுவதற்கு யாரும் முன் வரவில்லை. இதுவும் பத்திரமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

மதகதராஜா: சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள இந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடைக்கிறது. ஏவிஎம் இந்த படத்தை தயாரித்துள்ளது. பணம் மற்றும் வியாபாரம் காரணமாக இது பிரச்சனையில் சிக்கியுள்ளது.

2ஆம் இன்னிங்ஸில் ஓய்ந்து போன அரவிந்த்சாமி

நரகாசுரன் மற்றும் சதுரங்க வேட்டை: அரவிந்த் சுவாமிக்கு மட்டும் கிட்டத்தட்ட 3 – 4 படங்கள் அலமாரியில் கிடக்கிறது . இந்த படங்களுக்கு எல்லாம் அவருக்கு சரியாக சம்பள கொடுக்கவில்லை என டப்பிங் பேச மறுத்து வருகிறார் அரவிந்த்சாமி. இந்த 2 படங்கள் போக கல்லா பார்ட் மற்றும் வணங்காமுடி போன்ற படங்களும் கிடப்பில் கிடக்கிறது.

இடம் பொருள் ஏவல்: வருடத்திற்கு 8 படங்கள் வெளியிடும் விஜய் சேதுபதிக்கு இந்த படம் ரொம்ப நாளாகவே ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. சீனு ராமசாமி இயக்கிய இந்த படம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கிடப்பில் கிடக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ்,, விஷ்ணு விஷால், அழகம்பெருமாள் போன்றவர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்

Trending News