GOAT பட டிக்கெட் விற்பனை, நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு.. உஷாரான தளபதி!

GOAT: அரசியலுக்கு வர இருக்கும் நேரத்தில் தன்மீது எந்த களங்கமும் வந்து விடக்கூடாது என்பதில் விஜய் ரொம்பவே உஷாராக இருக்கிறார். முக்கியமாக அரசியல் ஆட்டம் ஆட காத்திருப்பவர்களுக்கு எந்த விதத்திலும் தீனி போட்டு விடக்கூடாது என்று தெளிவாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

தமிழக வெற்றி கழகம் என்னும் பெயரில் கட்சியை ஆரம்பித்து அரசியல் அறிவிப்பை வெளியிடும்போது விஜய் GOAT படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் தற்போது படத்தின் ரிலீஸுக்கு முன்னே தன்னுடைய கட்சி கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

விஜயின் இந்த அரசியல் முடிவால் கண்டிப்பாக GOAT பல சோதனைகளை சந்தித்தாக வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். பட ரிலீஸ் சமயத்தில் ஆக இருக்கட்டும், படத்தின் ஏதாவது ஒரு காட்சிகளாக இருக்கட்டும் ஏதாவது ஒரு பிசகு நடந்தாலும் அதை பெரிய அளவில் ஆக்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு

செப்டம்பர் 5ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கும் நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கி இருக்கிறது. டிக்கெட் விலை நியாயமானதாக இருக்க வேண்டும், சரியான முறையில் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற முதல் விஷயத்தை விஜய் தொடங்கி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் பேனர் வைக்கிறேன், கொடியேற்றுகிறேன் என்ற பெயரில் எந்த விஷயத்தையும் தலைமையின் கண்காணிப்பு இல்லாமல் செய்யக்கூடாது எனவும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் GOAT படத்தின் ரிலீஸ் கொண்டாட்டத்தில் எந்த ஒரு இடத்திலுமே தமிழக வெற்றி கழகத்தின் பெயர் மற்றும் கொடி உபயோகப்படுத்தக் கூடாது எனவும் ஏற்கனவே உத்தரவு வெளியாகிவிட்டது.

தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அதிரடியாக உத்தரவு ஒன்று பறந்திருக்கிறது. அதில் ஆன்லைன் புக்கிங்கில் டிக்கெட் வாங்கி அதை அதிக விலை கேவிற்கக் கூடாது என்பதுதான். இதற்கு முன்பு ரசிகர்கள் ஸ்பெஷல் ஷோ என்ற பெயரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டு வந்தது.

அதை அவர்கள் பல மடங்கு விலை உயர்த்தி விற்று வந்ததாக தெரிகிறது. தற்போது இந்த பிரச்சனைக்கு முடிவு கொண்டு வந்திருக்கிறார் விஜய். டிக்கெட் விஷயத்தில் நியாயமான முறையை கடைப்பிடித்தால் தான் சர்ச்சையில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்பதால் தான் இந்த முடிவு.

இருந்தாலும் அரசியலுக்கு வரும் நேரத்தில் இப்படி கண்ணும் கருத்துமாக செயல்படுபவர்கள், இதற்கு முந்தைய படங்களின் ரிலீசின் போது இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தார்களா என்பது ஒரு சிலரின் கேள்வியாக தான் இருக்கிறது.

பேனர் மற்றும் டிக்கெட் புக்கிங்கில் அடுத்தடுத்து விஜய் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இனி அதிகாலை ஷோ, FDFS போன்றவைகளுக்கெல்லாம் என்னென்ன உத்தரவுகள் வரப்போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

இணையத்தை கலக்கும் கோட்

Next Story

- Advertisement -