ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பிரச்சனையில் சிக்கிக் கொள்ளப் போகும் விஜயா.. ஹாஸ்பிட்டலில் இருக்கும் ரோகிணி அம்மா மூலம் மாட்டும் கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவுக்கு எப்படியாவது மீனாவிடம் ஒட்டிப் பழகிக் கொண்டு வரும் சுருதியை பிரிக்க வேண்டும் என்று எண்ணம். ஆனால் ரோகிணிக்கு, மீனா மற்றும் முத்துவுக்கு குடைச்சல் கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று ஆசை.

இதனால் இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்து சுருதி அம்மா மூலம் மீனாவுக்கு தொந்தரவு கொடுக்கலாம் என்று முடிவு பண்ணி சுருதி அம்மாவை பார்வதி வீட்டுக்கு வரவழைத்தார்கள்.

வீம்புக்கு செய்த காரியத்தால் சிக்கலில் மாட்டிக்கொள்ள போகும் விஜயா

அப்படி சுருதி அம்மா அங்கே போன பிறகு விஜயா, சுருதி கொஞ்சம் ஓவராக போய்க்கொண்டிருக்கிறார். என் பிள்ளைக்கு மதிப்பு மரியாதை கொடுக்காமல், வேலைக்காரன் போல் நடத்துகிறார். கூடவே சேர்ந்து என்னையும் அவமானப்படுத்தி பேசி அந்த பூக்காரி மீனா முன்னாடி அதிகாரம் பண்ணுகிறார் என்று போட்டு கொடுக்கிறார். உடனே ரோகிணி, உங்க பொண்ணு இப்படி எல்லாம் இருப்பதற்கு மீனாதான் காரணம் என்று வத்தி வைக்கிறார்.

இதையெல்லாம் கேட்ட சுருதி அம்மா, எதற்கு என்னிடம் சொல்கிறீர்கள். உங்க பையனை விட்டு பேச சொல்லி முடிந்தால் என் பொண்ண உங்க கண்ட்ரோலுக்கு வச்சுக்கோங்க என்று சொல்லி போய் விடுகிறார். அப்படி போகும் பொழுது எதர்ச்சியாக மீனாவை பார்க்கிறார். உடனே காரை நிப்பாட்டி மீனாவை வாய்க்கு வந்தபடி திட்டி விட்டு முத்துவையும் அசிங்கப்படுத்தி பேசுகிறார்.

இதற்கு திருப்பி பதிலடி கொடுத்துவிட்டார் மீனா. இருந்தாலும் சுருதி அம்மா கொஞ்சம் ஓவராக பேசிய நிலையில் அங்கே முத்துவும் வந்து விடுகிறார். பிறகு என்ன நடந்துச்சு என்று கேட்கும் பொழுது மீனா எதுவும் சொல்லாமல் சமாளிக்கிறார். ஆனால் அங்கே மீனாவின் தோழி பூ கட்டிக்கொண்டு நடந்த விஷயங்களை எல்லாத்தையும் பார்த்திருக்கிறார். அதனால் ஒன்று விடாமல் முத்துவிடம் சொல்லிவிடுகிறார்.

பிறகு முத்து மீனா கோவப்பட்டு வீட்டிற்கு வருவது போல் டிராமா செய்து சுருதி மற்றும் ரவியிடம் சண்டை போடுவது மாதிரி போட்டு விஜயாவை ஏமாற்றுகிறார்கள். ஆக மொத்தத்தில் இவர்களெல்லாம் ஒரே கூட்டணி என்பதற்கு ஏற்ப ஒன்றாக சேர்ந்து விஜயா மற்றும் ரோகினி மூஞ்சில் கரியை பூசுகிறார்கள். இதற்கு இடையில் விஜயா நடத்தும் நடன பயிற்சியில் தேவையில்லாமல் ஒரு மாணவன் மற்றும் மாணவியால் விஜயாவுக்கு ஒரு பிரச்சனை காத்துக் கொண்டிருக்கிறது.

அதாவது இவர்கள் சேர்ந்து செய்து வரும் தில்லாலங்கடி வேலையால் குடும்பத்தில் மற்றும் அனைவரும் முன் அசிங்கப்பட்டு விஜயா தலை குனிந்து நிற்கப் போகிறார். இதற்கிடையில் ரோகிணி அம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி இருக்கோம் என்று க்ரிஷ் மூலமாக போன் வருகிறது. இதனை கேட்டு பதட்டத்துடன் ரோகிணி, விஜயாவிடம் பொய் சொல்லிவிட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார்.

அங்கே போன ரோகிணி நிச்சயம் மாட்ட போகிறார். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப ரோகிணி, கிரிஷ் மற்றும் அம்மா இவர்கள் அனைவரும் மீனா கண்ணில் சிக்க போகிறார்கள். ஆனாலும் மீனா இதைக் கண்டு கொள்ளாமல் கிரிஷ் மட்டும் அவருடைய அம்மாவுக்கு உதவி செய்யும் விதமாக சப்போர்ட் பண்ண போகிறார்.

ஆனாலும் ரோகிணி பற்றிய சந்தேகங்கள் நாளுக்கு நாள் அவர்களுக்கு வளர்ந்து கொண்டே போகப் போகிறது. இதனால் கூடிய விரைவில் ரோகினி அனைவரிடமும் கையும் களவுமாக மாட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவம்

Trending News