Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மலையை விட்டுட்டு கடுகை பிடிப்பார்கள் என்று ஒரு சொலவடை உண்டு. அது போல தான் பொய் பித்தலாட்டம் என அடுக்கடுக்காக பாண்டியன் மற்றும் ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி மருமகளாக நுழைந்த தங்கமயில் பண்ணும் அட்டூழியம் தெரியாமல் கணவருக்கு சப்போர்ட் செய்யும் விதமாக ராஜி டியூஷன் எடுத்தது பெரிய குத்தமாக அனைவரும் மீனா மற்றும் ராஜியை ஒதுக்கி வைக்கிறார்கள்.
ராஜி டியூஷன் எடுத்ததால் சக்திவேல் மற்றும் முத்துவேல், பாண்டியனை அவமானப்படுத்தி பேசி இருந்தாலும் என் மருமகள் சொந்த காலில் நின்னு படிக்கணும் அவளோட ஆசை. அவளுடைய விருப்பத்தை நான் தடுக்க மாட்டேன் என்று அனைவரும் முன்னாடியும் பாண்டியன் கூறியிருந்தால் இந்த அவமானம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை விட்டுவிட்டு மச்சான்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு ஒட்டுமொத்த மானமும் போய்விட்டது என்பதற்கு ஏற்ப ஓவராக பீல் பண்ணி வருகிறார்.
வண்டி வண்டியாக பொய் பித்தலாட்டம் பண்ணும் தகரமயில்
இவர்தான் இப்படி இருக்கிறார் என்றால் பாண்டியன் குடும்பத்தில் இருக்கும் சிறுசு முதல் பெருசு வரை அனைவருமே மீனா மற்றும் ராஜியை கோபமாக தான் பார்க்கிறார்கள். இந்த விஷயம் எல்லாம் கேள்விப்பட்ட சரவணன் ஹனிமூன் முடிந்து விட்டு வரும்பொழுது தங்கமயில் இடம் அனைத்தையும் சொல்லிவிடுகிறார். சும்மாவே ஓவராக தங்கமயில் வண்டி வண்டியாக ராஜி மீனாவை தவறாக போட்டுக் கொடுப்பார்.
இதுல கொத்தாக ஒரு விஷயம் கிடைத்திருக்கிறது என்றால் சும்மாவா இருக்கும் தங்கமயில். அதோட வேலையை காட்டும் விதமாக வந்ததும் ராஜி தான் ஏதோ சின்ன பொண்ணு விவரம் தெரியாமல் டியூஷன் எடுத்தாள் என்றால் எல்லாம் தெரிந்த நீங்களும் கூடவே இருந்த சப்போர்ட் செய்தது சரியா என்று மீனாவை ஒட்டுமொத்த குடும்பத்தின் முன் நிற்க வைத்து கேள்வி கேட்டு அட்வைஸ் பண்ணுகிறார்.
இதெல்லாம் எனக்கு நேரம் என்று சொல்வதற்கு ஏற்ப மீனா திருப்பி பதில் பேச முடியாமல் மௌனமாக நிற்கிறார். ஆனால் இந்த தகரமயில் மருமகளாக பொய்ப் பித்தலாட்டமும் செய்து வந்திருக்கிறதை மறந்து இந்த அளவுக்கு ஆட்டம் போடுகிறது என்றால் அதற்கு பாண்டியன் ஓவராக செல்லம் கொடுத்து தலையில் தூக்கி வைத்து ஆடுவது தான்.
இன்னும் நகை அனைத்தும் தங்கநகை இல்லை, போலியான நகை என்று தெரிந்தால் கூட பாண்டியன் மனிச்சு விட்டுருவார் போல. அந்த அளவுக்கு தங்கமயிலுக்கு ஜால்ரா போடுகிறார். அடுத்ததாக நகை விஷயமும் கூடிய விரைவில் தெரியவரும் விதமாக லாக்கரில் இருக்கும் தங்கமயிலின் நகை கருத்துப் போய்விட்டது. இது எப்படியோ ராஜி அப்பா கைக்கு போகப் போகிறது. இதை வைத்தும் சக்திவேல் பாண்டியனுக்கு பிரச்சனை கொடுப்பார். அப்பொழுதுதான் தங்கமயிலின் சுயரூபம் அனைவருக்கும் தெரியவரும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- மீனா ராஜியை புரிந்து கொள்ளாமல் அராஜகம் பண்ணும் பாண்டியன் குடும்பம்
- ராஜியை விட்டுக் கொடுக்காமல் பொக்கிஷமாக பாதுகாத்த கதிர்
- ரொமான்டிக் போட்டோக்களை பார்த்து வெட்கப்பட்ட பாண்டியன்