கோட் படத்தின் ரிலீஸுக்காக விஜய் காத்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் கிட்டத்தட்ட 4 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் இருந்தே விஜய்க்கு ஒரு பான் இந்தியா ஸ்டாராக வேண்டும் என ஆசை உள்ளது. இப்பொழுது அதற்கான வேலைகளை பார்த்து வருகிறார்.
மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஹைதராபாத், டெல்லி, மும்பை என பல இடங்களுக்கு சென்று தனக்குண்டான ஆதரவையும், ரசிகர்களையும் கணித்து வந்தார். இப்பொழுது கோட் படத்தில் அதையும் தாண்டி ஒரு வேலையை செய்யப் போகிறார்.
மும்பையில் ஹிந்தி மொழியிலும் ரிலீஸ் ஆவதால்
அங்கே ஒரு பெரிய பிரமோஷனுக்காக ஒரு வேலையை செய்கிறார் தளபதி. இந்த படத்திற்காக மும்பையில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பிரத்தியோக பிரீமியர் காட்சியை ஒளிபரப்பும் படி ஏற்பாடு செய்திருக்கிறார்.
எண்டு கார்டுக்கு பிறகும் தளபதிக்கு வந்த பேராசை
இதன் மூலம் படத்திற்கான பிரமோஷன் வேலைகளையும் பார்த்த மாதிரி இருக்கும், அதுபோக பான் இந்தியா ஸ்டாராகவும் தன்னை காட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார் தளபதி. ஏற்கனவே சூர்யா , தனுஷ் ஹிந்தி படங்களில் நடிக்க போய்விட்டனர். இப்பொழுது தளபதிக்கும் அந்த ஆசை துளிர் விட்டிருக்கிறது.
கோட் படத்திற்கு பிறகு தமிழில் ஒரே ஒரு படம் மட்டும் நடிக்க போவதாகவும், அதன் பின் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேரமும் அரசியல் வேலைகளை செய்யப் போவதாகவும் விஜய் தரப்பில் இருந்து செய்திகள் வெளி வருகிறது. ஆனால் காலம் போன கட்டத்தில் இப்பொழுது பான் இந்தியா ஸ்டாராக வேண்டும் என விஜய் ஆசைப்பட்டு வருகிறார்.