ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மீனா ராஜியை ஒதுக்கி தகரமயிலுடன் கூட்டணி போட்ட கோமதி.. ஓவராக பொங்கியெழும் பாண்டியனின் மகன்கள்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் வீட்டுக்கு வந்ததும் தம்பிகளிடம் எதிர்த்த வீட்டில் இருப்பவர்கள் அப்பாவை இந்த அளவுக்கு அவமானப்படுத்தும் வரை நீங்கள் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க. நீங்க எதுவும் பேசி சண்டை போடலையா என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் சொன்ன விஷயத்துக்கு திருப்பி பதில் அளிக்கும் விதமாக நம்மிடம் எதுவும் இல்லை.

ஏனென்றால் ராஜி நமக்கு தெரியாம எடுத்த டியூஷன் விவாகரம்தான் பெரிய அளவில் அப்பாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ராஜியும் இதைப் பற்றி யாரிடமும் சொல்லாததால் திருப்பி பதில் பேச முடியாமல் அவர்கள் முன்னாடி நாம் அனைவரும் தலைகுனிந்து நிற்கும்படி நிலைமை ஆகிவிட்டது என்று சொல்கிறார். உடனே வழக்கம் போல் செந்தில் மற்றும் கதிர், இதுக்கெல்லாம் காரணம் ராஜி மீனாதான் என்பதற்கு ஏற்ப பேசி விடுகிறார்கள்.

ஜவ்வு மாதிரி இழுத்து அடித்துக்கொண்டே போகும் டியூஷன் பிரச்சனை

இதனை எடுத்து மீனா மற்றும் ராஜி சோகமாக இருக்கும் பொழுது எப்படியாவது அத்தையிடம் பேசலாம் என்று அவ்வப்போது கோமதியிடம் பேசி மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால் கோமதி நீங்கள் என்ன சொன்னாலும் நான் மன்னிக்கிறதா இல்லை. ஏனென்றால் நான் உங்களை அந்த அளவிற்கு நம்பியிருந்தேன். என்னிடம் கூட ஒரு வார்த்தை சொல்லாமல் என்னையும் ஏமாற்றி நீங்கள் செய்த காரியம் எந்த அளவிற்கு போய் நிற்த்திருக்கிறது என்பது உங்களுக்கு புரியுதா இல்லையா?.

இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் மாமா ஆரம்பத்திலே டியூஷன் எடுப்பதற்கு வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தார். ஆனால் அது கூட புரிஞ்சுக்காமல் இப்படி பண்ணி வச்சிட்டீங்களே என்று திட்ட ஆரம்பித்து விட்டார். பிறகு நகை திருப்பி கொடுக்கும் விதமாக லாக்கரில் போய் பணத்தை எடுக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது மீனா நீங்க தனியாக போக வேண்டாம் நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொல்கிறார்.

அதற்கு கோமதி யாரும் என்னுடன் வரவேண்டிய அவசியம் இல்லை. நான் தங்கமயிலை கூட்டிட்டு போகிறேன் என்று சொல்லி இரண்டு பேரும் கிளம்பி விடுகிறார்கள். மறுபடியும் சோகமான மீனா ராஜி வீட்டுக்குள்ளே கடுப்பாக இருக்கிறது கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாமா என்று சொல்லி கோவிலுக்கு கிளம்புகிறார்கள். அப்பொழுது அங்கு வந்த கதிரிடம் ராஜி நாங்கள் கோயிலுக்கு போயிட்டு வருகிறோம் என்று சொல்கிறார்.

ஆனால் கதிர் எதுவுமே கேட்காதபடி கோபமாக போய் விடுகிறார். பிறகு ராஜி மீனா பேசிக் கொண்டே கோவிலுக்கு போகும் பொழுது செந்தில் மாமா உங்களிடம் பேச ஆரம்பித்து விட்டார் என்று கேட்கிறார். அதற்கு மீனா, செந்தில் என்னை புரிந்து கொண்டார். என்னிடம் எந்த கோபமும் இல்லை என்று பேசவும் ஆரம்பித்து விட்டார் என்று சொல்லி ராஜி மனசை சமாதானப்படுத்துகிறார்.

ஆனால் இப்படி இவர்கள் இரண்டு பேரும் பேசிட்டு வரும்போது செந்தில் எதேர்ச்சியாக அங்கே வருகிறார். இவர்கள் வருவதை பார்த்தும் செந்தில் கண்டுகொள்ளாமல் போய்விடுகிறார். உடனே ராஜி அப்படி என்றால் இன்னும் செந்தில் மாமா உங்களிடம் பேசவில்லை கோபமாக தான் இருக்கிறாரா. எனக்காக தான் பொய் சொன்னீங்களா என்று மீனாவிடம் கேட்கிறார். அதற்கு மீனா இவங்க எல்லாம் எப்போதுமே மாற மாட்டாங்க.

அவங்களுக்காக நாம் இந்த அளவுக்கு மாறி இருக்கிறோம் என்பது கூட யோசிக்க மாட்டாங்க, விடு பார்த்துக்கலாம் என்று சமாதானப்படுத்தி கோவிலுக்கு கூட்டிட்டு போகிறார். இப்படி செந்தில் மற்றும் கதிர், பொண்டாட்டி மீது கோபமாக இருப்பதால் மூஞ்சி கொடுத்து கூட பேசாமல் ஓவராக பொங்கி எழுகிறார்கள். அதிலும் இந்த கோமதி மீனா மற்றும் ராஜியை ஒதுக்கும் அளவிற்கு தங்கமயிலுடன் கூட்டணி போட ஆரம்பித்து விட்டார். இதற்கெல்லாம் முடிவே இல்லையா என்பதற்கு ஏற்ப இந்த பிரச்சனை ஜவ்வு மாதிரி இழுத்து அடித்து கொண்டே போகுது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News