ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வேட்டையனால் அனல் குறைந்த கங்குவா.. காரணம் அந்த நபரா.? சூப்பர் ஸ்டாரின் கோபத்துக்கு பலியான சூர்யா

Rajini-Suriya: சூர்யா நடிப்பில் 2 வருடத்திற்கும் மேல் உருவான கங்குவா அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளை கூட தயாரிப்பு தரப்பு ஆரம்பித்து விட்டது. ஆனால் திடீரென சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் போட்டிக்கு வந்தது.

இது ஒரு புறம் எதிர்பார்க்கப்பட்டாலும் ஞானவேல் ராஜா இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக பேச்சு நடக்கிறது. அதனால் தான் இந்த தேதியை லாக் செய்தோம் என ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். ஆனால் திடீரென வந்த வேட்டையன் அறிவிப்பை கங்குவா டீம் எதிர்பார்க்கவில்லை.

அதைத்தொடர்ந்து இப்போது படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர். இதனால் கங்குவா படம் பற்றிய ஆரவாரமும் அனலும் தற்போது முற்றிலும் குறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இது படத்திற்கு சிறு பின்னடைவாகவும் மாறி இருக்கிறது. இதன் பின்னணியை பற்றி விசாரிக்கையில் ரஜினி அக்டோபர் 10ல் படம் வந்தே ஆக வேண்டும் என உறுதியாக இருந்தாராம். அதற்கு காரணம் கங்குவா டீமில் இருக்கும் முக்கியமான ஒருவர்தான்.

ரஜினி போட்ட கண்டிஷன்

அவர் மீது இருக்கும் கடுப்பில் தான் ரஜினியை போட்டிக்கு வந்ததாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது ரஜினியின் பேட்ட படம் வரும்போது சிறுத்தை சிவா, அஜித்தின் விசுவாசம் படமும் வெளியானது.

இதில் அஜித் படம் தான் வசூலில் கெத்து காட்டியது. அதன் பிறகு சூப்பர் ஸ்டார் சிறுத்தை சிவா உடன் அண்ணாத்த படத்தில் இணைந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை. இதனால் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டாரை ஏமாற்றிவிட்டார் என்ற கருத்து இன்று வரை உள்ளது.

இந்தக் கோபம் தான் வேட்டையன் கங்குவாவுடன் மோதுவதற்கு காரணம் என்கின்றனர். ஆனால் இது தயாரிப்பு தரப்பின் முடிவு தான் சூப்பர் ஸ்டாருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் கூறுகின்றனர்.

ஆனால் எது எப்படியோ இதற்கு பலியானது சூர்யா தான். ஏனென்றால் அவருடைய படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. இப்படத்தை தான் அவர் முழுதும் நம்பி இருந்தார். தற்போது அவர் பெரியவர்களுக்கு வழி விட வேண்டும் என பெருந்தன்மையாக சொன்னாலும் அவர் முகத்தில் ஒரு சோகம் இருந்ததை பார்க்க முடிந்தது.

ரஜினியின் கோபத்திற்கு பலியான சூர்யா

Trending News