ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

விஜயாவை வேலைக்காரியாக மாற்றும் சுருதியின் பிளான்.. உஷாராகிய மீனா, மனோஜிடம் உளறிய ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து எதார்த்தமாக திருமண வாழ்க்கை மற்றும் மனைவி வந்த பிறகு எப்படி வாழ்க்கை மாறுகிறது என்பதை காரில் வரும் கஸ்டமரிடம் பேசிக் கொண்டு வருகிறார். அப்பொழுது பைக் ஓட்டிட்டு வந்த மீனா முத்துவின் காரில் இடிக்கிறார். பிறகு முத்து மற்றும் மீனா இருவரும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாதபடி சண்டை போட்டு டிராமா பண்ணுகிறார்கள்.

இதை அந்த தெருவில் இருப்பவர்கள் வேடிக்கை பார்க்கும் பொழுது அந்த இடத்திற்கு டிராபிக் போலீஸ் வந்து விடுகிறார். அவர் வந்து திட்டும் பொழுது முத்து, இது என்னுடைய மனைவி மீனா தான். சும்மா தான் நாங்க சண்டை போடுற மாதிரி நடிச்சோம் வேற எந்த பிரச்சனையும் இல்லை என்று அனுப்பி வைக்கிறார்.

விஜயாவை முட்டாளாக்கி வேலை வாங்கும் சுருதி

பிறகு காரில் இருந்தவர் இவங்கதான் உங்க மனைவியா பேயாட்டம் ஆடுவாங்கன்னு சொன்னீங்களா அவங்க தானே அப்படின்னு கேட்கிறார். இதை கேட்ட மீனா நான் பேய் ஆட்டம் ஆடுறனா என்று சொல்லி கோபப்பட்டு வீட்டுக்கு போய் விடுகிறார். பிறகு முத்து, மீனாவை சமாதானப்படுத்துவதற்காக ஒவ்வொரு விஷயங்களாக சொல்லி வீட்டுக்கு போகும்போது அல்வா வாங்கி கொடுத்து மீனாவை சமரசம் செய்து விடுகிறார்.

இதற்கு இடையில் முத்து வாங்கிட்டு வந்த கொசு வலையை கட்டிலில் மாட்டிய பொழுது சுருதி வந்து பார்க்கிறார். அப்பொழுது அங்கே விஜயா இருப்பதால் சுருதி ட்ராமாவை தொடரும் விதமாக இது என்ன நடுவீட்டுக்குள்ள இப்படி அசிங்கமாக ஒரு கொசுவலை தொங்கிக்கிட்டு இருக்கிறது. இதுல தூசி வந்து அதிகமாக படியும். அப்படி என்றால் இங்கு இருப்பவர்களுக்கு டஸ்ட் அலர்ஜி வரவும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி மீனாவை திட்டுவது போல் டிராமா பண்ணுகிறார்.

உடனே விஜயாவும் சேர்ந்து ஆமா சுருதி இந்த மீனா தேவையில்லாத வேலை தான் பண்ணுகிறார். நீ எதற்கும் டென்ஷன் ஆகாத நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சமாதானப்படுத்துகிறார். அப்பொழுது விஜயா, ஸ்ருதி வேலைக்கு போயிட்டு வந்திருக்கிறார் டீ போட்டு கொடு என்று சொல்கிறார். அதற்கு சுருதி அவங்க ஒன்னும் எனக்கு டீ போட்டு தர தேவையில்லை என்று சொல்ல, மீனாவும் நான் ஏன் போட்டுக் கொடுக்கணும் வேண்டுமென்றால் அவர்களை போட்டு குடிக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு விஜயா, ஸ்ருதியிடம் நீ போட தேவையில்லை நான் உனக்கு போட்டு தருகிறேன் என்று டீ போட்டு ஒவ்வொரு வேலையாக செய்து வேலைக்காரியாக மாறுகிறார். சுருதியை பொருத்தவரை இந்த பாய்ண்ட வச்சிக்கிட்டு விஜயாவை வேலை வாங்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். எது எப்படியோ விஜயா அதிகாரத்திலிருந்து மீனா கொஞ்சம் தப்பிச்சு உஷாராகி விட்டார்.

அடுத்ததாக ரோகிணி ஹாஸ்பிடல் இருக்கும் அம்மாவை பார்த்துக் கொள்வதால் மனோஜிடம் ஃபோன் பண்ணி வித்யா வீட்டில் இருக்கிறேன் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது முடித்துவிட்டு வருகிறேன் என்று பொய் சொல்லுகிறார். ஆனால் இது எதுவும் தெரியாத வித்தியா, மனோஜ் ஷோரூம் சென்று ரோகிணியை பார்த்து பேசுவதற்காக போயிருக்கிறார்.

பிறகு ரோகிணி, வித்யாவுக்கு போன் பண்ணி நான் அம்மாவை பார்ப்பதற்காக ஊருக்கு வந்திருக்கிறேன். அதனால் மனோஜிடம் உன் வீட்டில் இருப்பதாக பொய் சொல்லி விட்டேன் என்று சொல்கிறார். உடனே வித்யா இத முன்னாடியே சொல்ல மாட்டியா நான் இப்போ உன்னை தேடி உன்னுடைய கடைக்கு தான் வந்திருக்கிறேன் மனோஜ் வேற என்னைய பார்த்துட்டான் என்று சொல்கிறார்.

அதற்கு ரோகிணி, எனக்கு போன் பண்ணாமல் நீ ஏன் வந்தாய் என்று திட்டிய நிலையில் எப்படியாவது மனோஜியிடம் பேசி சமாளித்து விடு என்று போனை கட் பண்ணி விடுகிறார். அடுத்து மனோஜ், வித்யாவிடம் ரோகிணி உன் கூட உன் வீட்டில் இருப்பதாக இப்பதான் போன் பண்ணினாள். நீ என்ன எங்கே இருக்கிறாய் என்று கேட்டு கேள்வி கேட்கிறார்.

அதற்கு வித்யா சரியாக பதில் சொல்லாமல் மனோஜிடம் உளறிக்கொண்டு அங்கே இருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார். இதனால் மனோஜ்க்கு சந்தேகம் வந்துவிட்டது. ஆனாலும் வீட்டிற்கு வரும் பொழுது ரோகினி, மனோஜை சமாளிக்கும் விதமாக பொய் பித்தலாட்டத்தை கைவசம் ரெடியாக வைத்திருப்பார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News