விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. மும்பையில் மட்டுமில்லை தமிழ் நாட்டிலும் இந்த பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். முதல் கடவுள் விநாயகருக்காக இந்நாளில் டிவியிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை போட்டு அசத்துவார்கள்.அப்படி இதுவரை டிவியில் போடப்படாத படங்களின் லிஸ்ட்.
சன் டிவி: எப்பொழுதுமே அரைத்த மாவை அரைக்கும் சன் டிவி இந்த முறையும் அதே பாலிசியை கையாண்டு இருக்கிறார்கள். காலையிலேயே பட்டிமன்றம் முடிந்தவுடன் 10 மணிக்கு சிவகார்த்திகேயன், சமந்தா நடித்த சீமராஜா. அதன் பின் ஒரு மணிக்கு ஜெயம் ரவியின் மிருதன் படம் போடுகிறார்கள்.
ஜி தொலைக்காட்சி: இவர்கள்தான் இதுவரை எந்த சேனலிலும் ஒளிபரப்பாகாத படத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். கவின் நடிப்பில் வெளிவந்த படம் ஸ்டார். இதை இவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று பகல் இரண்டு மணிக்கு ஒளிபரப்புகிறார்கள்.
கலைஞர் டிவி: இவர்கள் இந்த முறை எதிலும் போடாத புது படத்தை ஒளிபரப்புவது அனைவருக்கும் ஆச்சரியம். அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடி ப்பில் வெளிவந்த படம் ப்ளூ ஸ்டார், இதை பகல் 1.30 மணி அளவில் ஒளிபரப்புகிறார்கள்.
விஜய் டிவி: சமீபத்தில் வெளிவந்து சக்க போடு போட்ட படம் பிரேமலு. இந்தப் படம் கோடிக்கணக்கில் வசூலை வாரிக் குவித்தது. காதல் மற்றும் காமெடி கலந்த படமாக இது வெளிவந்தது. இதை விஜய் டிவி காலையில் 9:00 மணிக்கு ஒளிபரப்புகிறது.