வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

தாத்தாவை ஓவராக டார்ச்சர் பண்ணும் பாக்கியலட்சுமி டீம்.. டிஆர்பிக்காக மட்டமான வேலையை பார்க்கும் விஜய் டிவி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் கிட்டத்தட்ட 1500 எபிசோடுகளை தாண்டி இருக்கிறது. ஆனாலும் கதை எதுவும் இல்லைனாலும் அரைச்ச மாவை அரைத்து அதில் நடிக்கும் கதாபாத்திரங்களின் நடிப்பை வைத்து இதுவரை கொண்டுவந்து விட்டார்கள். தற்போது கிளைமாக்ஸ் கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும் என்பதற்காக இதில் தாத்தாவாக நடித்த ராமமூர்த்தி கதாபாத்திரத்தை முடித்து விட்டார்கள்.

ஆனால் ஒரு சீரியலில் இந்த அளவிற்கு எதார்த்தமான துக்க காட்சியை காட்ட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. இருந்தாலும் கடந்த சில வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எந்த சீரியலும் பெருசாக டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பெறவில்லை. அதனால் இப்படி ஒரு திருப்புமுனையை வைத்து பார்வையாளர்களை சென்டிமென்டாக தாக்க வேண்டும் என்பதற்காக தாத்தாவிற்கு ஓவராக டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள்.

தாத்தாவுக்கு தொடர்ந்து நடக்கும் அக்கிரமங்கள் பாக்கியாவை பலிகாடாக்கிய ஈஸ்வரி

சீரியலில் நடித்து விட்டோம் என்பதற்காக ராமமூர்த்தியும் இதற்கு சம்மதம் கொடுத்து விட்டார். இருந்தாலும் இறந்ததற்குப் பின் நடக்கும் ஒவ்வொரு சம்பிரதாயங்களும் இவருக்கு நிஜமாகவே நடப்பது போல் காட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக எதையும் மிஸ் பண்ணாமல் அப்படியே கொண்டு போவது பார்ப்பவர்களை எரிச்சல்படுத்தும் விதமாக இருக்கிறது.

அதிலும் பாக்கிய தான் இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் என்று ஈஸ்வரி எடுத்த முடிவின்படி பாக்யாவை பார்க்கும் பொழுது இது என்ன கொடுமை என்று சொல்லும் அளவிற்கு ரொம்பவே மட்டமாக இருக்கிறது. என்னதான் சீரியலாக இருந்தாலும் ராமமூர்த்திக்கோ அல்லது அவர்கள் வீட்டில் பார்ப்பவர்களுக்கும் நிச்சயமாக இது ஒரு வேதனையான துக்கத்தை கொடுக்கும் என்பதை மறந்து விட்டார்கள்.

விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாக இருக்கிறது. இனியும் இதையே வைத்து ஓட்டாமல் அடுத்தடுத்து விஷயங்களை வைத்து நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டால் நன்றாக இருக்கும்.

ஆனால் இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுகளில் தாத்தாவுக்கு நடக்கும் அக்கிரமங்களை பார்க்கும் பொழுது இந்த சீரியலை இப்போதைக்கு பார்க்க வேண்டாம் என்று தான் மக்களுக்கு தோன்றுகிறது. அந்த அளவிற்கு எதார்த்தம் என்ற பெயரில் டார்ச்சர் பண்ணி வருகிறார்கள். ஒரு படத்துல கூட இந்த அளவுக்கான காட்சிகள் இருக்காது. ஆனால் இதில் பாக்கியா செய்யும் கடைசி காரியம் கூட ரொம்பவே வேதனையை ஏற்படுத்துகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News