வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

அடுத்தடுத்து 5 இயக்குனரை லாக் பண்ணிய சூப்பர் ஸ்டார்.. மாரி செல்வராஜ்க்கு தூபம் போட்ட காரணம் இதுதான்

Rajini upcoming Movies: சூப்பர் ஸ்டார் 73 வயசு ஆனாலும் கொஞ்சம் கூட அழகும் ஸ்டைலும் குறையாமல் இளம் ஹீரோவுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். கடந்த வருடம் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புது உத்வேகத்துடன் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

அதிலும் இப்போ நடிக்கும் படங்களில் புது ஃபார்முலாவை பயன்படுத்தும் விதமாக மாஸ், கிளாஸ் என எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இயக்குனர் எதை சொல்கிறாரோ அதை அப்படியே நடித்துக் கொடுக்கும் அளவிற்கு தயாராகி விட்டார். அதனால் தான் என்னமோ தொடர் வெற்றியை பார்த்து வருகிறார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கும் படங்களையும் அடுத்து நடிக்க போகும் இயக்குனர்கள் பற்றியும் தற்போது பார்க்கலாம்.

கூலி படத்தில் அதிக ரிஸ்க் எடுததால் ரஜினிக்கு ஏற்பட்ட நிலமை

வேட்டையன்: ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் உருவாகி இருக்கிறது. இப்படம் பான் இந்தியா படமாக இருப்பதால் அமிதாபச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் பல ஆர்டிஸ்ட்களை வைத்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கி இருக்கிறது. மற்றும் சேட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கி இருக்கிறது. இப்படத்தை லைக்கா நிறுவனம் 160 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 10ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது.

கூலி: லோகேஷ் இயக்கத்தில் ரஜினி கூட்டணி வைத்திருக்கும் கூலி படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது மழையில் நனைந்து கொண்டு நடிப்பது போல் காட்சிகள் இருப்பதால் செயற்கை மழை மூலமாக சூட்டிங் வைத்திருந்தார்கள். ஆனால் இது இவருடைய உடல்நிலைக்கு ஒத்துழைக்காததால் சுடுதண்ணீர் வைத்து அந்த காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும் உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதனால் சூட்டிங்கை ரத்து செய்து சென்னை திரும்பி விட்டார் என சொல்லப்படுகிறது. இதில் சுருதிஹாசன் சிவகார்த்திகேயன், நாகர்ஜுனா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். மேலும் ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிடுவார்கள்.

ஜெயிலர் 2: ஜெயிலர் படத்துக்கு முன் ரஜினிக்கு சொல்லிக் கொள்ளும்படி பெருசாக வெற்றி பெறவில்லை. ஆனால் நெல்சன் கூட்டணியில் இணைந்த பிறகு ரஜினிக்கு ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக கிடைத்தது. இதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு இரண்டு பேரும் தயாராகிய நிலையில் கூலி படத்தை முடித்த கையோடு ரஜினி, நெல்சன் கூட்டணியில் ஜெயிலர் 2 படத்திற்கு பிள்ளையார் சுழி போட போகிறார்.

தலைவர் 173: புது இயக்குனர்கள் யார் மக்களிடம் பெயர் வாங்கினாலும் அந்த இயக்குனர்களை ரஜினி விட்டு வைப்பதில்லை. அப்படித்தான் இயக்குனர் ரஞ்சித், நெல்சன், லோகேஷ் இவர்களை வளைத்து போட்டார். இந்த வரிசையில் தற்போது முளைத்திருக்கும் மாரி செல்வராஜுக்கும் தூபம் போட்டு விட்டார்.

அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வாழைப் படம் அனைவரையும் கவர்ந்தது. அதோடு ரஜினியும் இப்படத்தை பார்த்து பாராட்டி வாழ்த்து மடலை தெரிவித்து மாரி செல்வராஜ் புகழ்ந்து தள்ளினார். அந்த வகையில் ரஜினி மாரி செல்வராஜ் கூட்டணி உறுதியாகிவிட்டது.

தலைவர் 174: என்னதான் புதுப்புது இயக்குனர்கள் என்று வந்தாலும் ஓல்ட் இஸ் கோல்ட்(old is gold) என்று சொல்வதற்கு ஏற்ப சில இயக்குனர் ரஜினியின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் மறக்க முடியாத இயக்குனராக கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ஷங்கர் இடம் பிடித்திருக்கிறார்கள். அதனால் இவர்களில் ஒருவர்தான் தலைவரின் 174 வது படத்தை இயக்குவார்கள் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Trending News