Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், செய்த தவறுக்கும் பண்ணிய துரோகத்திற்கும் என்னைக்கும் ஒரு தண்டனை நிச்சயம் உண்டு என்று சொல்வார்கள். அது நம் கண் முன்னாடியே காட்டும் விதமாக கோபி இதுவரை பாக்யா மற்றும் குடும்பத்தை தனியாக தவிக்க விட்டு யாரைப் பற்றியும் யோசிக்காமல் ராதிகா பின்னாடி போய் கல்யாணம் பண்ணிக் கொண்டார்.
அதன் பின்னும் ஈஸ்வரியை நம்பாமல் ராதிகா கர்ப்பம் கலைந்ததற்கு அம்மா தான் காரணம் என்று பழி சுமத்தி வெளியே அனுப்பினார். இப்படி தவறுக்கு மேல் தவறு செய்து வந்த கோபிக்கு தற்போது கிடைத்திருப்பது மிகப்பெரிய தண்டனையாக தெரிகிறது. அதாவது தாத்தாவிற்கு 80வது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக பாக்யா நடத்தி வைத்தார்.
கோபிக்கு ஈஸ்வரி கொடுத்த மிகப்பெரிய தண்டனை
ஆனால் யார் கண்ணு பட்டுச்சோ தெரியல தாத்தாவின் மரணம் மிகவும் வேதனை தரக் கூடியதாக அமைந்துவிட்டது. அவருக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பது அவருக்கே முன்கூட்டி தெரிந்ததனால் என்னமோ எல்லாரையும் கூப்பிட்டு வைத்து பேசி பாசத்தை காட்டி இருக்கிறார். போதாதற்கு கோபியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பொழுது தாத்தா அவரை அவமானப்படுத்தி ஒதுக்கி விட்டார்.
அத்துடன் ஈஸ்வரிடம் எனக்கு என்ன ஆனாலும் கோபி எந்த சடங்கும் பண்ண கூடாது என்று சொல்லி இருந்தார். இதை நினைத்து பார்த்து ஈஸ்வரி தற்போது தாத்தாவின் இறுதி சடங்கு செய்ய தயாரான கோபியை தடுத்து நிறுத்தும் விதமாக கோபிக்கு மிகப்பெரிய தண்டனையை கொடுத்து விட்டார். ஆனால் கோபி என்னுடைய அப்பாக்கு நான் தான் செய்ய வேண்டும்.
தயவு செய்து என்னை தடுத்து எனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்து விடாதீர்கள் என்று கதறி காலில் விழுந்து கெஞ்சி துடிக்கிறார். அத்துடன் அங்கு வந்தவர்கள் அனைவருமே கோபி செய்ய வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் யார் பேச்சையும் கேட்காமல் ஈஸ்வரி, என் கணவர் ஆசையை நிறைவேற்றும் விதமாக கோபி எந்த சடங்குமே செய்யக்கூடாது என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.
இதனால் நொறுங்கி போன கோபி நிலைமையை பார்த்து ராதிகா, புருஷனுக்காக ஈஸ்வரிடம் வக்காலத்து வாங்கி பேசுகிறார். அத்துடன் ராதிகா அம்மாவும் நீங்கள் பண்றது ரொம்பவே அநியாயம் என்று ஈஸ்வரியை குறை சொல்லுகிறார். இப்படி அங்கு இருப்பவர்கள் அனைவரும் கோபிக்கு சப்போர்ட்டாக பேசிய நிலையில் ஈஸ்வரி எடுத்த முடிவு படி சடங்கு சம்பிரதாயம் நடக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார்கள்.
ஆனால் வேறு யாரு பண்ண வேண்டும் என்று கேட்கும் பொழுது என்னுடைய மருமகள், அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும் என்று பாக்யாவிடம் கேட்கிறார். பாக்யாவும் இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் மாமனார் மற்றும் மாமியார் கேட்டுக்கொண்டபடி தாத்தாவிற்கு இறுதி சடங்கு சம்பிரதங்களை முறைப்படி செய்ய தொடங்கி விட்டார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- தாத்தாவை ஓவராக டார்ச்சர் பண்ணும் பாக்கியலட்சுமி டீம்
- மகளாக இருந்து மாமனாருக்கு காரியம் செய்யும் பாக்கியா
- கோபிக்கு மிகப்பெரிய தண்டனையை கொடுக்கும் ஈஸ்வரி