ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கோட் படத்துக்கு ஆளுங்கட்சி கொடுத்த நெருக்கடி.. தியேட்டர்களில் காட்டிய அடாவடித்தனம்

விஜய் நடிப்புக்கு எண்டு கார்டு போட்டு விட்டார். ஓரிரு படங்களோடு சினிமாவிற்கு கும்பிடு போட்டு விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறுகிறார். இன்று அவரது கடைசி கட்ட படங்களில் ஒன்றான வெங்கட் பிரபு இயக்கிய கோட் படம் ரிலீஸ் ஆகியது.

தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1100 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது . எப்படியும் முதல் நாள் வசூல் 40 கோடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலையில் இருந்தே சென்னையில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் கலை கட்டி வருகிறது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் திமுக தரப்பில் இருந்து பல நெருக்கடிகள் அவருக்கு வர தொடங்கியுள்ளது. எப்பொழுதுமே பெரிய ஹீரோக்கள் படம் என்றால் கோயம்பேடு ரோகிணி தியேட்டர்களில் அதிகாலை 4 மணி காட்சிகள் இருக்கும். ஆனால் பல அசம்பாவித சம்பவங்கள் நடப்பதால் அது நிறுத்தப்பட்டது.

தியேட்டர்களில் காட்டிய அடாவடித்தனம்

இந்த முறை கோட் படத்திற்கு முதல் காட்சி காலை ஒன்பது மணிக்கு தொடங்கப்பட்டது. முக்கியமான தியேட்டர்களில் குறைந்தது ஐந்து போலீஸ் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களுக்கு என்ன மாதிரியான கொண்டாட்டங்களுக்கு அனுமதி கொடுப்பது என்பது முதல் அளவிடப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பது, பெரிய பேனர்களுடன் ஆட்டம் போடுவது, மேலும் புதிய கட்சி கொடிகளுடன் திரையரங்குகளுக்கு வருவது இவற்றையெல்லாம் தடுக்கும் படி மேல் இடத்தில் இருந்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு தியேட்டர்களுக்காக சென்று பேனர் வைப்பதை நிறுத்தி உள்ளது ஆளும் கட்சி.

Trending News