சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

க்ரிஷை தத்தெடுக்க சம்மதம் கொடுத்த கல்யாணி அம்மா.. மீனா முத்துக்கு எதிராக விஜயாவை தூண்டிவிடும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பற்றிய விஷயங்கள் எப்பொழுது வெளியே வரும் என்று காத்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏமாற்றமாக தான் முடிகிறது. அதிலும் மீனா மற்றும் முத்து இந்த நாடகத்தின் கதாநாயகனாக இருந்தாலும் மீனா, மருமகள் என்பதைவிட அந்த வீட்டில் முழு நேரம் வேலைக்காரி ஆக தான் அடிமையாக இருந்து வருகிறார்.

அத்துடன் அந்த வீட்டில் மருமகளாக வாக்கப்பட்டு வந்திருக்கும் ரோகிணி மற்றும் சுருதிக்கும் எடுபடி வேலையை பார்த்து வருகிறார். அது மட்டுமில்லாமல் விஜயா வீட்டில் மருமகள் என்ற அந்தஸ்தை கொஞ்சம் கூட பெறாமல் அந்த வீட்டில் தனக்கென்று ஒரு ரூம் எதுவும் இல்லாமல் மாமியாரிடம் ஏச்சும் பேச்சும் வாங்கி ஒரு அடிமை வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறார்.

விஜயாவிடம் பத்த வச்ச ரோகினி

மீனாவின் நிலைமை தான் இப்படி என்றால் முத்துவின் நிலைமை இன்னும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. மீனாவது வாக்கப்பட்டு வந்த ஒரு பொண்ணு அதனால விஜயா மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் முத்து விஜயாவின் மகனாக இருந்தாலும் அந்த வீட்டில் ஒரு மூன்றாவது நபராக தான் இருந்து வருகிறார். இப்படி இரண்டு பேரும் நிலமை மோசமாக இருக்கும் போது க்ரிஷை வேற தத்து எடுக்கணும்னு நினைக்கிறாங்க.

அந்த வகையில் க்ரிஷை பார்த்து பாட்டியிடம் தத்தெடுக்கும் விஷயத்தை பேசிவிட்டு வரலாம் என்று முத்து மற்றும் மீனா கிராமத்துக்கு கிளம்பி போகிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரோகிணி, அம்மாவுக்கு போன் பண்ணி முத்து மீனா க்ரிஷை பார்ப்பதற்கு அங்கே வருகிறார்கள். ஆனால் நீ அவர்களிடம் கோபமாக பேசி திருப்பி வராதபடி நடந்து கொள்.

அத்துடன் கிரிசையும் அவர்களிடம் காட்டாதே பக்கத்து வீட்டில் எங்கேயாவது அனுப்பிவிடு என்று சொல்லி போனை கட் பண்ணுகிறார். அதே மாதிரி முத்து மீனா வரும்பொழுது கிரிஷ் அந்த வீட்டில் இல்லை. பிறகு ரோகிணி அம்மாவை பார்த்து பேசும் பொழுது முத்து மீனா தத்தெடுக்கும் விஷயத்தை சொல்லுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நாங்கள் தத்தெடுப்பது பாவப்பட்டு எடுக்கவில்லை.

அம்மா அப்பா இல்லாமல் வளர்ந்தால் ஒரு குழந்தை நிலைமை எப்படி இருக்கும் என்று எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த நிலைமை கிரிஸ்க்கு வர வேண்டாம் என்று யோசிக்கிறோம். எங்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் கிருஷ் தான் முதல் குழந்தையாக எங்களுக்கு இருப்பான். அதனால் எங்களை நம்பி நீங்கள் ஒரு நல்ல முடிவை யோசித்து சொல்லுங்கள் என்று சொல்லி கிளம்பி விடுகிறார்கள்.

இவர்கள் போன பிறகு ரோகிணிக்கு கிரீஸ் பாட்டி போன் பண்ணி பேசுகிறார். அப்பொழுது முத்து மீனா தத்தெடுக்கும் விஷயத்தை சொன்னதாக சொல்கிறார். இதை கேட்டதும் கோபப்பட்ட ரோகினி, முத்து மீனாவை திட்ட ஆரம்பித்து விடுகிறார். அதற்கு ரோகிணி அம்மா, அவங்க கேட்டதும் பேசினதும் தப்பா தெரியல. அவங்க க்ரிஷ் மேல் இருக்கும் உண்மையான அன்பினால் பேசுகிறார்கள்.

அவர்கள் கேட்டபடி க்ரிஷை தத்து கொடுத்திடலாம் என்று சொல்கிறார். உடனே ரோகிணி அது என்னுடைய குழந்தை நீ எப்படி முடிவு பண்ணலாம் என்று கேட்கும் பொழுது, பெத்தது மட்டும்தான் நீ வளர்த்து பக்குவமாக பார்த்துக் கொள்வது நான்தான். அதனால் அவன் மேல எல்லா உரிமையும் எனக்கு இருக்கிறது. எல்லாரிடமும் நான் சொன்னால் தான் அவனுடைய அம்மா என்று நீ தெரியும். அதனால் சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்காத.

உனக்கு உன் சந்தோசம் தான் முக்கியம் என்று எதைப் பற்றியும் யோசிக்காமல் இருக்கிறாய். ஆனால் முத்து மீனா அப்படி இல்லை. அவர்கள் இருவரும் கிறிஸ்ன் வாழ்க்கையை பற்றி யோசித்து ஒவ்வொரு முடிவாக எடுக்கிறார்கள். உன்னை விட அவர்கள் இருவரும் எவ்வளவோ பரவாயில்லை என்று ரோகினிடம் காட்டமாக பேசுகிறார். அதற்கு ரோகிணி, என் பிள்ளை பார்க்க உனக்கு கஷ்டமாக இருந்தா சொல்லு நான் என்ன பண்ணனும் எனக்கு தெரியும்.

அதற்காக தத்து கொடுக்கலாம் என்று யோசிக்கதை என்று திட்டிவிட்டுப் போனை வைக்கிறார். இதோடு விடாமல் ரோகினி, விஜயாவிடம் முத்து மீனாவை பற்றி தவறாக பேசி க்ரிஷை தத்தெடுக்க படியாதபடி சண்டை போடுவதற்கு தூண்டி விடுகிறார். ஆனால் இந்த நாடகத்தில் ரோகினி எப்ப மாட்டிக் கொள்வார் என்று தெரியவில்லை. அதே மாதிரி மீனா மற்றும் முத்து அடிமையாகவா இருப்பதை விட்டுவிட்டு அவர்களுக்கான வாழ்க்கை வாழ்ந்து வந்தால் நன்றாக இருக்கும்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News