ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கடைசி நிமிஷத்துல கூட பாக்யாவை அல்ல்படுத்தும் ஈஸ்வரி.. கோபியை பழிவாங்கிய கர்மா, அடங்கிப் போன ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இதுவரை கோபி என்ன பண்ணினாலும் தன் பிள்ளை என்று அனைத்து தவறுகளையும் மறந்து மன்னித்து ஈஸ்வரி கோபிக்கு சப்போர்ட் செய்து வந்தார். ஆனால் ராதிகா கர்ப்பம் கலைந்து போன விஷயத்தில் ஈஸ்வரியை நம்பாமல் கோபி அம்மாவை உதாசீனப்படுத்தியதால் பெரிய அசிங்கத்தை ஈஸ்வரி சந்தித்தார்.

அதிலிருந்து கோபி தன்னுடைய மகனை இல்லை என்று மொத்தமாக ஈஸ்வரி ஒதுக்கி விட்டார். அத்துடன் கோபி அப்பாவும் ஈஸ்வரிடம் எனக்கு என்ன ஆனாலும் கோபி எந்த காரியமும் செய்யக்கூடாது என்று சொல்லி இருந்தார். தற்போது அவர் சொன்னதை நிறைவேற்றும் விதமாக ஈஸ்வரி, என்னுடைய கணவருக்கு செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் கோபி செய்யவே கூடாது.

கோபிக்கு மிகப்பெரிய தண்டனை கொடுத்து பிடிவாதம் பண்ணும் ஈஸ்வரி

என் கணவர் முதன் முதலாக என்னிடம் கேட்ட ஒரு விஷயம் இதுதான். அதனால் யார் என்ன சொன்னாலும் நான் இதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இதனால் கோபி சுக்கு நூறாக உடைந்து போய்விட்டார். அம்மா காலில் விழுந்து கெஞ்சியும் பார்த்து விட்டார். அப்படி இருந்தும் ஈஸ்வரி மனம் இறங்கவில்லை.

அங்கு வந்து இருப்பவர்களும் கோபியின் நிலைமையை பார்த்து பரிதாபத்துடன் ஈஸ்வரிடம் கேட்கிறார்கள். ஆனால் ஈஸ்வரி பிடிவாதமாக மறுப்பு தெரிவித்த நிலையில் ராதிகா, அப்படி என்றால் யார் தான் இந்த காரியத்தை செய்ய முடியும் என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி, எங்களுடைய மகள் பாக்யா இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை என்று மொத்த பாரத்தையும் பாக்யா மீது போட்டுவிட்டார்.

பாக்யாவிடம் உன் மாமனாரின் ஆத்மா சார்ந்து அடைய வேண்டும் என்றால் நீதான் எல்லா காரியமும் செய்ய வேண்டும் என்று கேட்கிறார். இதனால் மறுப்பு தெரிவிக்க முடியாத பாக்கியா, ஈஸ்வரி கேட்டுக்கொண்டபடி அடுத்தடுத்து விஷயங்களை செய்வதற்கு தயாராகி விட்டார். இருந்தாலும் பாக்கியா இதையெல்லாம் பண்ணும் பொழுது கொஞ்சம் கொடுமையாக தான் இருக்கிறது.

கோபியை பார்ப்பதற்கும் பாவமாகத்தான் இருக்கிறது. இதுவரை செய்த பாவங்களுக்கு தண்டனையாக தற்போது கோபி மிகப்பெரிய தண்டனையை அனுபவிக்கிறார். இதற்கு எதுவும் சொல்ல முடியாத நிலையில் ராதிகாவும் அடங்கிப் போய்விட்டார். அத்துடன் ஈஸ்வரி கேட்டுக் கொண்ட படி பாக்யா மாமனாருக்கு அனைத்து காரியங்களையும் செய்கிறார்.

ஆனால் இப்படி ஒவ்வொரு விஷயங்களையும் வைத்து காட்ட வேண்டுமா? பார்ப்பதற்கே கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப வேதனையை அளிக்கிறது. அதிலும் தாத்தா எப்படி இந்த மாதிரி ஒரு விஷயத்திற்கு சம்மதம் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை. வீட்டில் இருப்பவர்களும் இதை பார்த்தால் எந்த அளவிற்கு நொந்து போவார்கள் என்பதும் யாரும் யோசிக்காமல் டிஆர்பிக்காக மட்டமான வேலையை விஜய் டிவி இறங்கி செய்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News