கோட் படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1100 திரையரங்குகளில் எந்த ஒரு படமும் போட்டிக்கு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லா மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் நான்கு காட்சிகள் இந்த படம் தான் ஓடுகிறது. முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 3000 காட்சிகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது.
இந்த வாரம் எந்த ஒரு சின்ன பட்ஜெட் படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. உதயநிதியும் கோட் படத்தினால் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் எந்த படமும் வெளியிட வேண்டாம் என உத்தரவு போட்டிருக்கிறார். ஆனால் இப்பொழுது வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியை தவிர கோட் பீவரை எவராலும் குறைக்க முடியாது.
இந்த சூத்திரத்தை தெரிந்தவர்கள் ஆளுங்கட்சியினர். அதனால் அஜித்தை வைத்து தான் இவர்களது கோட் ஹைப்பை குறைக்க முடியும் என்று இப்பொழுது வேறு ஒரு பக்கா பிளானை போட்டு வருகின்றனர். அதாவது வெங்கட் பிரபு கையாலேயே அவர் கண்ணையே குத்த திட்டம் போட்டுள்ளனர்.
வெங்கட் பிரபு கையாலேயே கண்ணை குத்தும் ஆளுங்கட்சி
2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த படம் ஒன்றை இப்பொழுது ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அஜித் நடிப்பில் வெளிவந்த பிளாக்பஸ்டர் ஹிட் படம் மங்காத்தா. இப்பொழுது இந்த படத்தை மீண்டும் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கிய படம் என்பதால் இதற்கும் வரவேற்பு இருக்கும்.
விஜய்க்கு சக போட்டியாளர் அஜித் மற்றும் வெங்கட் பிரபு என்பதால் இப்பொழுது இந்த படம் மீண்டும் வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. இதனால் ஆளுங்கட்சி திமுகவிற்கும் லாபம் தான். இந்த படம் 2011 ஆம் வருடத்திலேயே கிட்டத்தட்ட 70 கோடிகள் வரை வசூல் சாதனை செய்தது.