Vetrimaaran : வெற்றிமாறன் விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, மஞ்சு வாரியர், ராஜூ மேனன், கௌதம் மேனன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கரை போல் இப்போது வெற்றிமாறனுக்கும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஷங்கர் இந்தியன் 2 படத்தை எடுத்த நிலையில் நிறைய காட்சிகள் படமாக்கி விட்டார். அடுத்ததாக இந்தியன் 3 படம் வந்தாலும் இந்தியன் 2 கிட்டத்தட்ட 3 மணி நேரம் திரையிடப்பட்டது.
இதுவே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தை பெற்று தந்தது. இந்த சூழலில் விடுதலை 2 படத்தில் 4 மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு இன்னும் வெற்றி மாறன் படபிடிப்பு நடத்தி வருகிறார். இதனால் இன்னும் ஒரு மணி நேர காட்சி அதில் சேர்க்கப்படும்.
விடுதலை 2 படத்தில் வெற்றிமாறனுக்கு ஏற்பட்ட குழப்பம்
கடைசியாக விடுதலை படத்தின் இறுதி கட்டத்தில் 4 மணி நேரம் திரையிட கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் தியேட்டர் வெளியீட்டிற்கு மட்டும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் 30 நிமிடங்களாக கட் செய்யப்பட உள்ளது. ஏனென்றால் ஏற்கனவே விடுதலை படத்தின் முதல் பாகம் 2 மணி நேரம் 30 நிமிடம் திரையிடப்பட்டது.
இப்போது ஷங்கர் போல் எதை வெட்டுவது எதை வைப்பது என்று தெரியாமல் வெற்றிமாறன் விழி பிதுங்கி நிற்கிறாராம். மேலும் தியேட்டரில் 2.30 நிமிடம் விடுதலை 2 ஒளிபரப்பாகும் நிலையில் கட் செய்யப்படாத காட்சிகள் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
ஆகையால் தியேட்டரை காட்டிலும் ஒடிடியில் விடுதலை 2 படத்திற்கான கவனம் அதிகம் ஈர்க்கப்பட இருக்கிறது. மேலும் தற்போதும் வெற்றிமாறன் படப்பிடிப்பு நடத்தி வரும் நிலையில் டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி விடுதலை 2 திரைக்கு வர இருக்கிறது.
தோல்வியே பார்க்காத வெற்றிமாறன்
- இந்தியன் 2 ஆபத்தை அறிந்த வெற்றிமாறன்
- விஜய் சேதுபதிக்கு வெற்றிமாறன் கொடுக்கும் குடைச்சல்
- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்