Vijay in TVk: அலைக்கடலென திரண்டு ஓடிக்கொண்டே இருக்கணும் என்று சொல்வதற்கு ஏற்ப சினிமாவில் ஜெயித்துக் காட்டிய விஜய் அடுத்த கட்ட முன்னேற்றமாக அரசியலில் வெற்றி பெற தயாராகி விட்டார். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் கட்சியை ஆரம்பித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க பட்டிருந்தது.
இதற்கிடையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த கோட் படம் இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்று வருகிறது. இதனை அடுத்து இன்னும் கடைசியாக தளபதி 69 படத்தோடு சினிமாவிற்கு குட் பாய் சொல்ல தயாராகி விட்டார். இந்த சூழ்நிலையில் விஜய்யின் அரசியல் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக நமது நாட்டின் தேர்தல் ஆணையம் தமிழக வெற்றி கழகத்தை அரசியல் கட்சியாக சட்டபூர்வமாக உறுதி செய்து விட்டது.
முதல் மாநாட்டிற்கு தயாரான விஜய்
இதை இக்கட்சியின் தலைவரும் மற்றும் நடிகருமான விஜய் அதிகாரபூர்வ அறிவிப்புடன் வெளியிட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து முதற்கட்ட வேலையாக முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும். இனி தொடர்ந்து மக்களுக்கான பணிகளில் ஈடுபட ஒவ்வொரு பணிகளும் செய்து கொண்டே வருவோம்.
தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் கொடுத்த அங்கீகாரம்
தடைகளை தகர்த்தெறிந்து கொடியை உயர்த்தி கொள்கை தீபம் ஏந்தி தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றி கொடியை ஏந்தி மக்களை சந்தித்து வாகை சூடுவோம் என்று பதிவிட்டு இருக்கிறார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது.
இதற்கிடையில் பசி இல்லா உணவகம் திட்டம், கண் தானம், ரத்ததானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை விஜய் அவருடைய ரசிகர் மன்றத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்தார். இதனை அடுத்து அரசியலுக்கு தயாராகிய நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் விதமாக விருதுகளை கொடுத்து கௌரவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் புது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புது முயற்சியில் இறங்கி இருக்கிறார்.