Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், என்னதான் அங்க நடக்குது என்று சொல்வதற்கு ஏற்ப இந்த டியூஷன் ட்ராக் கடந்த சில வாரங்களாக ரம்பமாக அறுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக தங்கமயில், கோமதியிடம் நைசாக பேசி மீனா மற்றும் ராஜிக்கு சப்போட்டாக பேசி சமாதானம் படுத்தி விட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் பூமர் பாண்டியனாக இருக்கும் மாமனாரையும் கவிழ்ப்பதற்கு மீனா முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் ஆபீஸ்க்கு கிளம்பிய மீனா நான் போயிட்டு வருகிறேன் மாமா என்று சொல்லிய நிலையில் பாண்டியன் கண்டுக்காமல் உள்ளே போய்விடுகிறார். ஆனால் மீனா போன பிறகு பின்னாடி நின்னு வருத்தப்படுகிறார்.
ஒரு வழியா டியூஷன் ட்ராக்குக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா
ஆனாலும் மீனா சும்மா விடுற ஆளா, நேரா பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வண்டியை விடுங்க என்று மாமனாரை பார்ப்பதற்காக மீனா அங்கே போய்விட்டார். போனதும் மாமனாரிடம் செண்டிமெண்டாக பேசி என்னுடைய அப்பா அம்மா என்னிடம் பேசவில்லை என்று நான் ஒரு நாள் கூட வருத்தப்படவில்லை. ஏனென்றால் நீங்களும் அத்தையும் அந்த அளவிற்கு என்னை பார்த்துக் கொண்டீர்கள்.
நானும் உங்களை அவர்கள் இடத்தில் தான் வைத்துப் பார்க்கிறேன். ஆனால் இப்பொழுது நீங்கள் பேசாமல் இருக்கும் பொழுது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. அதே நேரத்தில் எங்க அப்பா என்னிடம் பேசிக் கொண்டிருந்தால் என்னை இந்த அளவுக்கு விட்டு இருப்பார்களா. எனக்காக சப்போர்ட் பண்ணி பேசி இருப்பாங்க.
ஆனால் இப்பொழுது எனக்காக பேசுவதற்கு யாரும் இல்லை. அதனால்தான் நான் உங்களிடம் பேச வந்திருக்கிறேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பாண்டியன் மனசை கரைத்து விட்டார். உடனே பாண்டியன் அழுகாதே, நான் உன்னிடம் பேசுகிறேன் என்று சொல்லி மீனாவை சமாதானப்படுத்தி வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.
அப்பொழுது அங்கு வந்த செந்தில், மீனாவை பார்த்து அதிர்ச்சியாக நிற்கிறார். உடனே பாண்டியன், செந்திலிடம் என்ன அந்த பிள்ளையை பார்த்துட்டு இருக்க பைக்ல கூட்டிட்டு போய் ஆபீஸ்ல விட்டுட்டு வா என்று சமாதான கொடியை காட்டி செந்திலை தூது போக சொல்கிறார். ஆனாலும் செந்தில், அப்பா சொல்வதற்கு மறுப்பு தெரிவிக்காமல் மீனாவை கூட்டிட்டு போயி மன்னிப்பு கேட்பார்.
ஆனால் இதை மீனா சும்மா விடுவாங்களா, இது தான் சான்ஸ் என்று செந்திலை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி பண்ணியது தவறு என்று உணரும் வகையில் மீனா நல்லா வச்சு செய்யப் போகிறார். இதனை தொடர்ந்து இத்துடன் இந்த டியூஷன் ட்ராக் முடிவடைந்து விட்டது என்பதற்கு ஏற்ப அடுத்த கட்டமாக ராஜி மற்றும் கதரின் காதல் ஆரம்பமாகப் போகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- மருமகளுக்கு செல்லம் கொடுக்கும் பாண்டியன்
- தகரமயிலை பொண்டாட்டியிடம் இருந்து காப்பாற்ற வரும் பாண்டியன்
- நைசாக பேசி மீனா ராஜியுடன் கூட்டணி சேர்ந்த பாண்டியன் மருமகள்