Dhanush: இன்று ஜெயம் ரவி தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக் கூட சொல்லாமல் கவலையை இருக்கின்றனர். இதற்கு காரணம் நேற்றைய தினம் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்துள்ளதாக ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை தான்.
காதல் ஜோடிகளாக பறந்து திரிந்த இவர்களின் விவாகரத்திற்கு என்ன காரணம் என்று ஊடகங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து பல விஷயங்களை கூறிவருகிறார்கள். குறிப்பாக தனுஷ் மற்றும் ஆர்த்தி இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த பிரச்சனைக்கு தனுஷ் தான் காரணம் என்றும் ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.
ஆர்த்தி ஆரம்பத்திலேயே பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமா பிரபலங்களின் நட்பு அப்போதிலிருந்து அவருக்கு கிடைத்ததால் பல பார்ட்டிகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் ஒரு சில பார்ட்டிக்கு சென்ற போது தனுஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் விவாகரத்தில் தனுசுக்கு சம்மதம் இருக்கிறதா?
மேலும் இவர்களின் விவாகரத்தில் தனுஷுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை வலைப்பேச்சு அந்தணன் கூறினார். அதோடு ஆர்த்தியின் அதீத காதல் தான் ஜெயம் ரவியை விவாகரத்து செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். ஜெயம் ரவியை ஆரம்பத்தில் சினிமாவில் வளர்த்து விட்டது அவரது தந்தை எடிட்டர் மோகன் மற்றும் அவரது அண்ணன் ஜெயம் ராஜா தான்.
ஜெயம் தொடங்கி பல படங்களை தனது தம்பி ரவிக்காக ராஜா கொடுத்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சினிமா டேட் ஆகியவற்றை ஆர்த்தியின் குடும்பம் தான் பார்த்துக் கொண்டு இருந்தது. அப்போது பல படங்களை புக் செய்து நிற்க கூட நேரம் இல்லாத அளவுக்கு ஜெயம் ரவியை லாக் செய்துள்ளனர்.
அதோடு மோகன் ராஜா தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முன்வந்த போதும் ரவியால் டேட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்ததாம். மற்றொருபுறம் ஆர்த்தி ஜெயம் ரவி மீது உள்ள காதலால் அவர் என்ன செய்கிறார் என்று உளவு பார்க்க ஆள் அமைத்துள்ளார்.
அதுவும் ஊட்டி சூட்டிங்கில் இருக்கும்போது இரவு 12 மணிக்கு போன் செய்து வீடியோ காலுக்கு வர சொல்லி உள்ளார். இதனால் ஜெயம் ரவி தன்னை மனைவி சந்தேகப்படுவதாக நினைத்து மிகுந்த மன கஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளார். இவ்வாறு பல டார்ச்சரில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்று ஜெயம் ரவி முடிவெடுத்து விவாகரத்து பெற்றார் என வலைப்பேச்சு அந்தணன் தனது யூடியூப் சேனலில் கூறி உள்ளார்.