செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

ஜெயிலர் படத்தின் கால்வாசியை கூட தொட முடியாமல் தினரும் கோட்.. வாய்க்கு வந்தபடி உளறிய டீம்

Jailer and Goat: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் கடந்த 5ம் தேதி அனைத்து திரையரங்கிலும் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக அமைந்தது. எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்டுகள், நிறைய ஆர்டிஸ்ட்களை வைத்து கதையை தாறுமாறாக கொடுத்திருக்கிறார் என்று பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக முதல் நாள் வசூல் மட்டுமே கிட்டத்தட்ட 126 கோடியை பெற்றது.

அதிலும் இந்தியா முழுவதும் 76.93 கோடி வசூலை பெற்றது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சேர்த்து 52 கோடி மட்டுமே வசூலை அடைந்தது. அந்த வகையில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 128 கோடி வசூல் செய்திருக்கிறது.

வாயாலேயே வடை சுட்ட கோட் டீம்

மேலும் ஐந்தாவது நாளில் 14 கோடி வசூலை பெற்று ஒட்டுமொத்தமாக 288 கோடி லாபம் பார்த்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ஏஜிஎஸ் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ரஜினியின் ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொஞ்சம் கூட உங்களால் நெருங்க முடியாது என்பதற்கு ஏற்ப சில விஷயங்களை ஷேர் பண்ணி வருகிறார்.

அதாவது ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாளில் ஆன்லைனில் ரிசர்வேஷன் 638K டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கோட் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாளில் முன்பதிவு செய்யப்பட்டது வெறும் 173k மட்டும்தான் என்பதை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் என்னதான் குட்டிக்கரணம் போட்டு, இருக்க அனைத்து ஆர்டிஸ்ட்களையும் வைத்து கோட் படத்தை கொடுத்தாலும் எங்க தலைவர் ரஜினி படத்துடன் கிட்ட நெருங்கவே முடியாது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதுல வேற இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பிரேம்ஜி உட்பட ஒவ்வொருவரும் இப்படம் நிச்சயம் ரெக்கார்ட் பிரேக் பண்ணும் அளவிற்கு 1500 கோடி வசூலை அடையும் என்று வாய்க்கு வந்தபடி உளறினார்கள். ஆனால் ரிலீசான ஐந்தாவது நாளிலேயே திரையரங்குகளில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது என்று ரஜினியின் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

அடுத்த மாதம் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் பொழுது தரமான சம்பவத்தை செய்ய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த வருடம் லியோ மற்றும் ஜெய்லர் படம் முட்டி மோதி கொண்டதில் ஜெயிலருக்கு கிடைத்த வெற்றி போல் இந்த ஆண்டு வேட்டையன் முன்னாடி கோட் படம் தோற்றுப் போய் நிற்கப் போகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News