Vijay-TVK: இந்த வருடம் மீடியாக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது விஜய் தான். கட்சி ஆரம்பித்ததில் தொடங்கி மாணவர்களுக்கான பரிசு வழங்குதல், கோட் ரிலீஸ் என அவர் பிஸியாக இருந்தார். இதை அடுத்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது அவருடைய முதல் கட்சி மாநாடை தான்.
அதன்படி சமீபத்தில் தன்னுடைய கட்சியின் கொடி, பாடல் ஆகியவற்றை விஜய் அறிமுகப்படுத்தினார். அதை தொடர்ந்து முதல் கட்சி மாநாடு விக்ரவாண்டியில் செப்டம்பர் 23 நடைபெறும் என்ற தகவலும் கசிந்தது.
அதற்கான அனுமதி, மாநாட்டிற்கான ஏற்பாடு என அனைத்தும் பரபரப்பாக நடந்து வருகிறது. மேலும் அன்றைய நாளில் அவருடைய கொள்கை என்ன? யாருக்கு எதிராக அரசியல் செய்வார்? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கொள்கை என்ன.?
ஆனால் தற்போது இந்த மாநாடு தள்ளி போக வாய்ப்பு இருக்கிறதாம். ஏற்கனவே இதில் ஆளும் கட்சியின் தலையீடு இருப்பதாக ஒரு பேச்சு வெளிப்படையாகவே கிளம்பியது.
இப்போது பார்த்தால் செப்டம்பர் 23 அன்று தமிழக முதல்வர் தலைமையில் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. அதே நாளில் விஜயின் கட்சி மாநாடு நடந்தால் சிக்கல் ஏற்படும் என்பதற்காக கூட ஒத்தி வைக்கப்பட்டு இருக்கலாம்.
அது மட்டும் இன்றி மாநாடு நடத்துவதற்கு 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கால அவகாசமும் குறைவாக உள்ளது. இதுவும் ஒரு காரணமாகும். அதனால் விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார். இது குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளிவரும் என்கின்றனர்.