சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பாண்டியனுக்கு ஐஸ் வைத்து டியூஷன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா.. திருடிய பணத்தால் மாட்டும் கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், டியூஷன் பிரச்சனை தான் பாண்டியன் குடும்பத்தில் கடந்த சில வாரங்களாக போய்க் கொண்டிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோமதி, மீனா மற்றும் ராஜிடம் சமரசம் ஆகிவிட்டார்.

இதனை தொடர்ந்து இவர்களுடைய கூட்டணி பழைய மாதிரி ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் கோமதி மற்றும் ராஜி பேசிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்த பாண்டியன் பேச வரும் பொழுது பயத்தில் ராஜி வெளியே கிளம்பிவிட்டார்.

இதனால் பாண்டியன், கோமதி இடம் என்னாச்சு என்ன பார்த்து பயந்து ஏன் இந்த பொண்ணு இப்படி போகுது என்று கேட்கிறார். அதற்கு கோமதி நீங்க பண்ணினது சும்மாவா என்று சொல்லி பேசாமல் இருப்பதால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனையாக இருக்கும்.

அடுத்ததாக கதிருக்கு வரும் பிரச்சனை

கொஞ்சமாக அதை யோசித்துப் பார்த்தீர்களா? தெரியாம ஏதோ செஞ்சுட்டாங்க அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்து அவர்களை ஒதுக்கி வைப்பது நியாயமா என்று பாண்டியனை பார்த்து கோமதி கேள்வி கேட்கிறார்.

அப்பொழுது பாண்டியன், இந்தப் பிள்ளை மீனாவும் ஆபீஸ்க்கு கிளம்பும்பொழுது என்னிடம் போயிட்டு வருகிறேன் என்று சொன்னது. ஆனால் நான் எதுவும் சொல்லாமல் உள்ளே வந்து விட்டேன் என்று கொஞ்சம் மன வருத்தத்துடன் பாண்டியன், கோமதி இடம் சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாண்டியன் கடைக்கு போன பொழுது அங்கே மீனா பாண்டியனிடம் பேசுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். பிறகு பாண்டியனுக்கு ஐஸ் வைத்து செண்டிமெண்டாக பேசி கண்ணீர் விட்டு எப்படியோ பாண்டியனை சமரசம் செய்து டியூஷன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அனைவரையும் சாந்தப்படுத்தி விட்டார்.

அடுத்ததாக அங்கே வந்த செந்திலை, மீனாவை ஆபீசில் விட்டுவிட்டு வா என்று பாண்டியன் சொல்கிறார். ஆனால் தற்போது மீனா யாரும் என்னை விட வேண்டாம் என்று சொல்லி தனியாக நடந்து போகிறார்.

ஆனால் பின்னாடியே செந்தில், மீனாவை சமாதானப்படுத்தும் விதமாக போகிறார். இந்த பிரச்சினை முடிந்தாலும் அடுத்த பிரச்சனையாக வரப்போவது கதிருக்கு தான். அதாவது தங்கமயில் மற்றும் சரவணன் ஹோட்டலில் தங்குவதற்கு பணம் தேவைப்படும் பொழுது கதிர் என்ன செய்வது என்று தெரியாமல் பாண்டியன் போனிலிருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டார்.

அந்த விஷயம் தற்போது பாண்டியனுக்கு தெரிய வரப்போகிறது. பிறகு வழக்கம் போல் பாண்டியன் ருத்ரதாண்டவம் ஆடி கதிரை மட்டம் தட்டி பேசி அனைவரும் முன்னாடியும் பிரச்சினை பண்ண போகிறார். ஆனால் இதை பார்த்துட்டு சும்மா இருக்காமல் சரவணன் நடந்த விஷயத்தை அனைத்தையும் சொல்லிவிட்டால் கதிருக்கு எந்த பிரச்சினையும் வராமல் போய்விடும்.

ஆனால் அதை செய்யாமல் வாயை மூடிட்டு வேடிக்கை பார்த்தால் எல்லா பாரமும் கதிர் மேலே விழுந்து மறுபடியும் பாண்டியன், கதிர் மேல் கோபப்பட்டு பேசாமல் இருக்கும்படி ரிப்பீட் காட்சியாகவே அடுத்தடுத்து நடக்கப் போகிறது.

ஆனால் தங்கமயில் பற்றி எப்பொழுது தெரியும் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. அதற்குள் இந்த குடும்பத்தின் ஒற்றுமையை தங்கமயில் மூலம் பாக்கியம் கெடுத்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News