ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

போராட்டத்துக்கு முன் புதிதாய் முளைத்த 75 படங்கள்.. பெரிய சீட்டிங் பேர்வழியான தனுஷ்

தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ஏற்கனவே ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தனுஷ் தேனியில் இருக்கிறார், புதிதாய் ஆகாஷ் பாஸ்கருடன் இணைந்து ஒரு படத்திற்கான சூட்டிங் வேளையில் ஈடுபட்டு இருக்கிறார்.

ஆகஸ்ட் 15 முதல் எந்த ஒரு புதுப்பட ஷூட்டிங் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் போர்க்கொடி பிடித்து வருகிறது, அதனால் தனுஷ் அந்த தேதிக்கு முன்பே இந்த படத்தின் சூட்டிங் வேலையை தொடங்கிவிட்டார்.

தொடங்கப்பட்ட பழைய படங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. ஆனால் அந்த படங்களும் நவம்பர் இறுதிக்குள் முடித்துவிட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்து இருக்கிறது. இதனால் தனுஷ் போராட்டத்திற்கு முன்பே ஆரம்பித்து ஒரு பெரிய தில்லாலங்கடி வேலையை செய்து விட்டார்.

பெரிய சீட்டிங் பேர்வழியான தனுஷ்

ஏற்கனவே தனுஷ் மீது ரெட் கார்டு போடப்பட்ட பிரச்சனையில் அந்த தடையை நீக்கும்படி நடிகர் சங்கம் ஓவர் பிரஷர் கொடுத்து வருகிறது. சங்க பொறுப்பில் இருக்கும் பூச்சி முருகன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

தயாரிப்பாளர் கதிரேசன் என்பவருக்கு தனுஷ் இரண்டு படங்கள் பண்ணி தருவதாக ஒப்பந்தம் போட்டு அதற்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் கால் சீட் கொடுக்கவில்லை.

இதனால் தான் தனுஷ் மீது தடை போடப்பட்டது. இப்பொழுது அந்த தடையும் என்ன ஆனது என்று தெரியவில்லை. இதற்கிடையில் தயாரிப்பாளர் சங்க போராட்டத்திற்கு செக் வைக்கும் வகையில் புதிதாய் 75 படங்கள் திடீரென ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பழைய படங்கள் கணக்கில் இதெல்லாம் வருவதால் நவம்பர் இறுதிக்குள் முடிக்கப்படுமா என்பது தெரியவில்லை.

Trending News