Goat 7th Day Collection: விஜய்யின் கோட் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது ஏழு நாட்கள் தாண்டியும் ஹவுஸ்ஃபுல்லாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் விஜய்க்கு குடும்ப ஆடியன்ஸ் அதிகம். அதோடு குடும்பங்கள் கொண்டாடும் படமாகத் தான் கோட் படம் அமைந்துள்ளது
என்னதான் சமூக வலைதளங்களில் கோட் படத்திற்கு விமர்சனம் எழுந்து வந்தாலும் வசூலில் பட்டையை கிளப்புகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இதற்கு முன்னதாக விஜய்யின் பிகில் படத்தை எடுத்திருந்தது. இந்த படத்திற்கு போட்ட பட்ஜெட்டை காட்டிலும் இரண்டு மடங்கு லாபத்தை பார்த்தது.
அதனால் தான் கோட் படத்திற்கு விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுக்கவும் ஏஜிஎஸ் நிறுவனம் சம்மதித்தது. அதேபோல் இப்போது தனிக்காட்டு ராஜாவாக வசூல் வேட்டையாடி வருகிறார் விஜய். அதாவது விநாயகர் சதுர்த்திக்கு கோட் படம் வெளியானது.
கோட் 7வது நாள் கலெக்ஷன்
போட்டிக்கு எந்த படமும் வெளியாகாததால் அதிக தியேட்டர்களும் கிடைத்தது. அதன்படி முதல் நாளே 126 கோடி வசூலை அள்ளியது. இப்போது ஏழு நாட்களைக் கடந்த நிலையில் 330 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 170.75 கோடியும், மற்ற மொழிகளில் நேற்றைய தினம் 8 கோடியும் வசூல் செய்துள்ளது. மொத்தமாக 380 கோடி பட்ஜெட்டில் கோட் படம் எடுத்த நிலையில் இப்போதே முக்கால்வாசி பணத்தை எடுத்து விட்டது. அதோடு சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
இதுவரை வசூல் மன்னனாக திகழ்ந்து கொண்டிருந்த விஜய்யை இன்னும் ஒரு முறை தான் திரையில் பார்க்க முடியும் என்பது ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது. மேலும் விஜய்யும் தனது கடைசி படமான தளபதி 69 படத்திற்காக ஆயத்தமாகி வருகிறார்.
வசூல் வேட்டையாடும் கோட்