சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த விஜய் டிவி.. விஷயம் தெரிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆண்டவர்

Bigg Boss: யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டாள் எல்லாம் சௌக்கியமே என்று கண்ணதாசன் தன்னுடைய பாடலில் சொல்லி இருப்பார். அதன் அர்த்தத்தை சரியாக புரிந்து நடந்து கொண்டிருக்கிறார் உலக நாயகன் கமலஹாசன். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய தூணாக இருக்கும் கமல் சின்னத்திரைக்கு வந்தபோது எல்லோருக்குமே ஆச்சரியம் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் நெருக்கமாகி அதை தனக்கான அரசியல் ஆட்டத்திற்காக பயன்படுத்தத்தான் கமல் உள்ளே வந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கமலை கொண்டாடினார்கள்.

ஆனால் போகப் போக சேனலின் டிஆர்பிக்காக ஒரு சில விஷயங்கள் நடக்கும் பொழுது கமலால் அங்கு எதுவுமே பேச முடியாமல் போனது. இதனால் மக்களின் கமல் சம்பாதிக்கும் நிலைமை ஏற்பட்டது. கடைசியாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கமலின் பெயர் மொத்தமும் டேமேஜ் ஆனது என்று தான் சொல்ல வேண்டும்.

கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த விஜய் டிவி

மக்கள் அதிகம் விரும்பிய பிரதீப் ஆண்டனி பெண்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக சொல்லி ரெட் கார்டு கொடுத்த கமல் மீது மக்கள் அதிகம் தங்களுடைய வெறுப்பை காட்ட ஆரம்பித்தார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த ரெட் கார்டு கொடுத்த பிறகு உள்ளே இருந்த போட்டியாளர்கள் பேசிய சில விஷயங்கள் கமலுக்கு எதிராகவே திரும்பியது.

ஒரு கட்டத்தில் டிஆர்பிக்காக தன்னை இந்த நிலைமைக்கு விஜய் டிவி கொண்டு வந்து விட்டதை கமல் புரிந்து கொண்டார். நிகழ்ச்சி முடியயிருக்கும் தருவாயில் பிரதீப் ஆண்டனிக்கு நான் ரெட் கார்டு கொடுக்கவில்லை நீங்கள் முன்மொழிந்ததை நான் வழிமொழிந்தேன் என தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

அப்போதே கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விடுவார் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து விலகியது கமலின் முடிவு என்றுதான் தற்போது வரை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கமலை இந்த நிலைமைக்கு தள்ளியது விஜய் டிவி என தெரிய வந்திருக்கிறது. கமல் எதுவும் சொல்லாததற்கு முன்பே விஜய் டிவி ஒரு சில நடிகர்களிடம் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது பற்றி கமலுக்கு தெரிய வந்திருக்கிறது. இனியும் இங்கு இருந்தால் சரிப்பட்டு வராது என நினைத்து அவர் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய வெளியேற்றத்தை அறிவித்து விட்டார்.

தற்போது கமலஹாசன் அமெரிக்காவில் AI தொழில்நுட்பத்தை பற்றி மூன்று மூன்று மாத பயிற்சி படிப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

Trending News