சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

12 வருடத்திற்கு பிறகு தமிழுக்கு வரும் பட்டாசு நடிகை.. சூர்யா 44க்கு டப் கொடுக்கும் கருப்பழகி

எப்பொழுதுமே ஒரு படத்திற்கு கமிட்டாகும் பொழுது சம்பளம் எவ்வளவு என்று கேட்கும் ஹீரோயின்களுக்கு மாறாக கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அந்த நடிகை மீண்டும் 12 வருடம் கழித்து தமிழ் சினிமாவில் இப்பொழுது காலடி எடுத்து வைக்கிறார்.

2012ஆம் ஆண்டு தமிழில் நடித்தவர் இப்பொழுது மீண்டும் சூர்யா 44வது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிப்பு என்று வந்து விட்டால் அனைவருக்கும் இவர் சிம்ம சொப்பனமாக விளங்குவார். கடந்த 12 வருடமாக தமிழை மறந்து ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு என அக்கடதேசம் சென்று விட்டார்.

1996ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய படமாக வெளிவந்த ஃபயர் படத்தில் நடித்தவர் நந்திதா தாஸ். அந்த படத்தில் இவர் கணவரிடம் இருந்து ஆறுதல் கிடைக்காததால் ஓரினச்சேர்க்கையாளராக மாறிவிடுவார். இந்த படத்திற்கு அப்போதே பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதன் பின் நந்திதா தாஸ் நடிக்க கூடாது என்ற அளவில் போராட்டம் செய்தனர்.

சூர்யா44க்கு டப் கொடுக்கும் கருப்பழகி

அதன் பிறகு நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். பணத்திற்காக இல்லாமல் கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாகவே இவர் நடிப்பு அமைந்தது. தமிழ் இவர் நான்கே நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் விஷ்வ துளசி போன்ற படங்களில் மீண்டும் தமிழில் தனது நடிப்பை தொடங்கினார். அதன் பிறகு இவர் 2012 ஆம் ஆண்டு தமிழில் கடைசியாக நீர்ப்பறவை படத்தில் நடித்தார். பின்னர் மீண்டும் காணாமல் போய்விட்டார். இப்பொழுது 12 வருடங்கள் கழித்து சூர்யாவின் 44வது படத்தில் நடித்து வருகிறார்.

Trending News