ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஆக்சன் காட்சிகளே இடம்பெறாத 5 படங்கள்.. சத்தமே இல்லாமல் ஹிட் கொடுத்த தனுஷ்

Dhanush : இப்போது வெளியாகும் படங்களை எடுத்துக் கொண்டால் கத்தியும் இரத்தமும் தான் இருந்து வருகிறது. ஆனால் சண்டைக் காட்சிகளே இல்லாமல் படங்களை வெற்றி அடையச் செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக சில படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஐந்து படங்களை இப்போது பார்க்கலாம்.

ஓ மை கடவுளே

அசோக் செல்வன், ரித்திகா சங் ஆகியோர் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான படம் தான் ஓமை கடவுளே. இந்தப் படத்தில் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்தாலும் ஆக்ஷன் காட்சிகள் போன்று எதுவும் இந்த படத்தில் இடம்பெறவில்லை.

மொழி

பிரித்திவிராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா ஆகியோர் நடிப்பில் 2007 இல் வெளியாகி மாபெரும் ஹிட் பெற்ற படம் தான் மொழி. மிகவும் உணர்ச்சி பூர்வமான கதையாக எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு இடமே இல்லை. மிகவும் எதார்த்தமாக இந்த படத்தை ராதா மோகன் கொடுத்திருந்தார்.

ஜோக்கர்

ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் இயக்கத்தில் 2016 வெளியான திரைப்படம் தான் ஜோக்கர். இந்திய ஜனாதிபதியாக தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் ஒரு சாதாரண கிராம வாசியின் கதையை தான் இயக்குனர் எடுத்திருந்தார்.

விண்ணைத்தாண்டி வருவாயா

கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு கூட்டணியில் உருவானது தான் விண்ணை தாண்டி வருவாயா. இதில் சிம்பு மற்றும் திரிஷா இடையே உள்ள காதல் காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் சிம்பு காதல் தோல்வியை சந்தித்தாலும் சண்டை காட்சிகள் இடம் பெறாமல் வெற்றி பெற்றது.

திருச்சிற்றம்பலம்

தனுஷ் மற்றும் நித்யா மேனன் காம்போவில் வெளியானது தான் திருச்சிற்றம்பலம். எல்லாராலும் நிராகரிக்கப்படும் தனுஷ் ஒரு சிறந்த அன்புக்காக ஏங்குகிறார். அது நித்யா மேனன் இடத்திலிருந்து அவருக்கு கிடைக்கிறது. ஆர்ப்பாட்டமே இல்லாமல் ஒரு எதார்த்தமான படத்தை கொடுத்து தனுஷ் வெற்றி கண்டார்.

படு பிஸியாக இருக்கும் தனுஷ்

Trending News