சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

எடுடா வண்டிய, சீறி பாயும் கைப்புள்ள.. வடிவேலுக்கு வரிசைகட்டி நிற்கும் 3 படங்கள்

Vadivelu : வைகைப்புயல் வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கி இப்போது படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் வடிவேலு வித்யாசமான கேரக்டரில் நடித்தது பலரது பாராட்டையும் பெற்றிருந்தார். அதன் பிறகு அவர் நடித்த சந்திரமுகி 2 படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இப்போது மீண்டும் எடுடா வண்டிய என சீறிப்பாயும் கைப்புள்ளைக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதில் நின்று நிதானமாக ஒவ்வொரு படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ராம் பாலா இயக்கத்தில் உருவாகும் ஜிவி பிரகாஷின் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் வடிவேலுவுடன் பகத் பாஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே மாமன்னன் படத்தில் இவர்களது காம்போ பெரிய அளவில் பேசப்பட்டது.

வடிவேலு லைன் அப்பில் இருக்கும் 3 படங்கள்

இந்த படத்தில் இவர்கள் எலியும் பூனையுமாக இருப்பார்களா இல்லை, நண்பர்களாக இருப்பார்களா என்பது படம் வெளியானால் தான் தெரிய வரும். ஆனால் இப்படம் அட்வென்ச்சர் கதையை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த காம்போ தான் சுந்தர் சி மற்றும் வடிவேலு. வின்னர் படத்தில் வடிவேலுவின் கைப்புள்ள கேரக்டரை இப்போதும் பார்த்து சிரிக்காத ஆட்களே கிடையாது. அந்த அளவுக்கு சுந்தர் சி காமெடி கதாபாத்திரங்களை பிரித்து மேய்க்க கூடியவர்.

அதேபோல் தலைநகரம் படத்தில் நாய் சேகர் கேரக்டர் வடிவேலு தவிர யாராலும் நடிக்க முடியாது. இப்போது மீண்டும் சுந்தர் சி, வடிவேலு இணைந்து கேங்கர்ஸ் படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை சுந்தர் சியே இயக்கம் நிலையில் குஷ்பூ தயாரிக்கிறார்.

பம்பரமாக சுற்றும் வடிவேலு

Trending News