H Vinoth : எச் வினோத் விஜய்யின் திரை வாழ்க்கையில் கடைசி படமாக தளபதி 69 படத்தை எடுக்க உள்ளார். இப்போது மொத்த திரை உலகத்தின் பார்வையும் அவரை நோக்கி தான் இருக்கிறது. அவர் பேசும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இன்றைய தினம் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் நந்தன் படத்தின் விழா நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் எச் வினோத்தும் கலந்து கொண்டு சில விஷயங்களை பேசி இருந்தார்.
அதில் ஒரு சிறந்த படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் சொன்ன விஷயம் தான் இப்போது பலராலும் பாராட்டப்படுகிறது. அதாவது ஒரு நல்ல படம் என்பது பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ அல்லது பாக்ஸ் ஆபீஸ் வைத்து சொல்லிவிட முடியாது.
ஒரு நல்ல படம் எப்படி இருக்க வேண்டும் என்று பேசிய வினோத்
ஒரு மனிதரை நல்ல மனிதராக மாற்றும் அல்லது மாற்ற முயற்சிக்கும் படம் தான் சிறந்த படம் என்று வினோத் கூறி இருக்கிறார். அவ்வாறு சதுரங்க வேட்டை படம் தொடங்கி துணிவு வரை தன்னுடைய திரை வாழ்க்கையில் மிகக் குறுகிய காலத்தில் நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்.
இப்போது முதல் முறையாக விஜய் உடன் கூட்டணி போட்டு உள்ள நிலையில் அரசியல் கதையாக தளபதி 69 படம் இருக்காது என்று ஏற்கனவே வினோத் கூறியிருந்தார். ஆகையால் மக்களுக்கு நல்ல கருத்துள்ள ஒரு படத்தை தான் கொடுக்க இருக்கிறார்.
மேலும் தளபதி 69 படத்தை கேவிஎன் புரொடக்ஷன் தயாரிக்கிறது. வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்களின் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது. விஜய், வினோத் கூட்டணி பட்டாசாக வெடிக்க உள்ளது.
அனல் பறக்கும் தளபதி 69
- ஃபேர்வெல் கொடுக்க தயாரான வினோத், தளபதி 69 கதை இதுதான்
- விஜய் 69 குட் நியூஸ் சொன்ன ஹச் வினோத்
- மேடையில் போட்டு உடைத்த எச்.வினோத், 200% இப்படி தான் இருக்கும்