10 நாட்களில் கோட் செய்த கலெக்ஷன்.. வசூல் வேட்டையாடும் விஜய்

Goat Collection: விஜய்யின் கோட் படம் வெளியாகி இன்றுடன் 10 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் 380 கோடி பட்ஜெட்டில் கோட் படத்தை தயாரித்த நிலையில் இப்போது வசூலை வாரி குவித்து கொண்டிருக்கிறது.

ஒரு புறம் தளபதி 69 படத்திற்கான அப்டேட் அடுத்தடுத்த வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. விஜய்யின் கடைசி படம் இது என்பதால் வினோத் எவ்வாறு இந்தப் படத்தை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

மேலும் இப்போது 10 நாட்கள் ஆகியும் கோட் அலை ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கிறது. விஜய் படங்களுக்கு குடும்ப ஆடியன்ஸ் எப்போதும் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் வெங்கட் பிரபு கோட் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாகத்தான் எடுத்திருந்தார்.

கோட் பத்தாவது நாள் கலெக்ஷன்

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்தை பார்க்க அதிகம் தியேட்டருக்கு வருவதை காண முடிகிறது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை பத்தாவது நாள் முடிவில் 13 கோடி வசூலை பெற்றிருக்கிறது. இதுவரை 197.75 கோடி கலெக்ஷன் செய்திருக்கிறது.

நேற்று மட்டும் திரையரங்குகளில் 56.74 சதவீதம் மக்கள் கூட்டம் இருந்துள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பங்களாக தியேட்டருக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால் வசூலும் சற்று அதிகரிக்கும்.

மேலும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 360 கோடிக்கு மேல் வசூலை கோட் படம் பெற்றுவிட்டது. படம் வெளியாவதற்கு முன்பு பிரேம்ஜி, வைபவ் போன்ற நடிகர்கள் ஆயிரம் கோடி வசூலை அசால்ட்டாக கோட் அடிக்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் அது இப்போது எட்டாக் கனியாகத் தான் இருக்கிறது.

வசூல் மழையில் கோட்

Trending News

- Advertisement -spot_img