தனுஷ் நடிப்பதையும் தாண்டி இப்பொழுது இயக்கத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்சமயம் தேனியில் அடுத்த படத்திற்கான வேலையில் மும்மரமாக இறங்கியுள்ளார். இந்த படத்தை அவரே இயக்கி, நடிப்பதாகவும் கூறுகின்றனர்.
ஏற்கனவே அவர் இயக்கி நடித்த ராயன் படம் 100 கோடி வசூலை பெற்று தந்தது. இதனால் சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தனுசுக்கு கொடுத்து வருகிறது. சன் பிக்சர்ஸ் காக இன்னும் ஒரு படத்தை தனுஷ் இயக்குகிறார். தனுஷ் இதுவரை மொத்தம் 3 படங்கள் இயக்கியுள்ளார்.
பா பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என மூன்று படங்களை இயக்கியுள்ளார் தனுஷ்.100 கோடிகளில் எடுக்கப்பட்ட ராயன் படம் 150 கோடிகளை வசூலித்து தனுஷிற்கு மட்டும் இல்லாமல் சன் பிக்சர்ஸ்க்கு பெரிய லாபத்தை உண்டு பண்ணியது. இப்பொழுது தனுஷின் அடுத்த படத்தின் பெயரும், படத்தின் வில்லன் யார் என்பதும் தெரியவந்துள்ளது.
அடுத்த படத்தின் டைட்டிலும் வில்லனும் ரெடி
தனுஷ் தேனியில் மலை கிராமப் பகுதியில் வில்லேஜ் சம்மந்தப்பட்ட கெட்டப்பில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் படத்திற்கு இட்லி கடை என்றும் பெயர் வைத்துள்ளனர். இதன் மூலம் இந்த படத்தில் தனுஷ் இட்லி கடை நடத்தி வரும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிகிறது.
இந்த படத்திற்கு வில்லன் கதாபாத்திரம் தான் முக்கியம் என ஏற்கனவே சொல்லப்பட்டது, அதனால் வில்லனாக அருண் விஜய்யை தேர்ந்தெடுத்துள்ளனர். அருண் விஜய் ஏற்கனவே பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதுபோக ரெட்டை தலை என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
- Raayan : அடங்காத அசுரனாக மிரட்டும் தனுஷ்
- ஓடிடியில் மொக்கை வாங்கிய ராயன்
- ராயனால் மாறன் இப்போ ஹேப்பி அண்ணாச்சி