புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

ஆயிரத்துக்கே வழியில்லாத ராஜமவுலி ஹீரோ.. அடுத்து வெளிவர இருக்கும் 2 படங்கள் 2000 கோடி வசூல் செய்யுமா?

Rajamouli: இந்திய அளவில் 1000 கோடி வசூல் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்க பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த ஹீரோ நடிக்கவுள்ள 2 படங்களின் 2 ஆம் பாகம் சுமார் ரூ. 2000 கோடி வரை வசூல் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அந்த நடிகர் தொட்டது துலங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, 8 திக்கும் புகழ் ஓங்கி ரசிகர் பட்டாளத்தையே குவித்து வைத்துள்ளார். சலார் மற்றும் கல்கி 2898 படங்களில் நாயகன் பிரபாஸ் தான் அந்த நடிகர். இவரது அடுத்த 2 படங்கள் ரூ. 2000 கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.

பாகுபலி படம் இவர் வாழ்க்கைக்கும், சினிமா பயணத்துக்கும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. சலார் மற்றும் கல்கி 2898 ஏடி படங்கள் நல்ல வசூலை குவித்தன. குறிப்பாக கல்கி திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது.

என்னதான் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக இருந்தாலும், விமர்சன ரீதியாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இரண்டு படங்களுமே இல்லை என்பது தான் உண்மை. ஆனால், கல்கி படத்தை பொறுத்த வரையில், வட மாநிலங்களில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில், சளார் மற்றும், கல்கி 2898 ad படத்தின் இரண்டாம் பாகங்கள் விரைவில் உருவாக உள்ளது. அவை குறைந்தது ரூ. 2000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என்று திரைத்துரையில் பேசப்படுகிறது. என்னதான் ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் என்று பல பெரும் தலைகள் இருந்தாலும், இவர்களை விட வசூலில் முன்னிலைக்கு வந்து, வசூல் மன்னனாக நிற்பது பிரபாஸ் தான்.

இந்த வசூல் மன்னனின் குறைந்த பட்ச வசூலே 500 கோடியாக இருக்கும் நிலையில், 2000 கோடி கண்டிப்பாக வசூல் செய்யும் என்று ஒரு தரப்பினர் சொன்னாலும், 1000 கோடிக்கே இன்னும் சரியான proof இல்லை.. அதற்குள் 2000 கோடியா என்றும் விமர்சித்து வருகின்றனர்

- Advertisement -spot_img

Trending News